உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவின் ஷிண்டே யார்?

கர்நாடகாவின் ஷிண்டே யார்?

சித்ரதுர்கா; ''மஹாராஷ்டிராவை போல கர்நாடகாவிலும் நடக்கலாம். யார் ஷிண்டேவாக மாறுவர் என்று எனக்கு தெரியாது,'' என, பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு கூறி உள்ளார்.சித்ரதுர்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:மஹாராஷ்டிராவில் சிவசேனாவில் இருந்து பிரிந்து, பா.ஜ.,வுடன் ஏக்நாத் ஷிண்டே கூட்டணி வைத்தார். அதுபோன்ற நிலைமை கர்நாடகாவிலும் விரைவில் நடக்கலாம். இங்கு யார் ஷிண்டேவாக மாறுவர் என்பது எனக்கு தெரியாது.கர்நாடக காங்கிரசில் என்ன நடக்கிறது என்பதை, எங்கள் கட்சி மேலிட தலைவர்கள் கவனித்து வருகின்றனர். ஷிண்டேவாக மாறுபவர்களுக்கு ஆதரவு கொடுப்பது பற்றி, மேலிட தலைவர்கள் சரியான நேரத்தில் முடிவு எடுப்பர்.மக்களின் வரி பணத்தை, தன் சொந்த பணம் போன்று முதல்வர் சித்தராமையா செலவு செய்கிறார். பட்ஜெட்டில், 'சக்தி' திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல், போக்குவரத்து தொழிலாளர்களை, அரசு நடுத்தெருவில் நிறுத்த பார்க்கிறது. அவர்களின் சம்பள உயர்வு, பென்ஷன் புறக்கணிக்கப்படுகிறது. 4 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்தும் ஒன்றும் பயன் இல்லை. எக்கசக்கமாக கடனையும் வாங்கி வைத்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ