| ADDED : ஜூன் 12, 2025 06:15 PM
புதுடில்லி: ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கு முன்னர் கடைசியாக 2020 ல் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இந்திய வரலாற்றில் 1996 ல் நடந்த விமான விபத்தில் 349 பேர் உயிரிழந்ததே துயரமான சம்பவமாக இருந்து உள்ளது.இந்தியாவில் கடந்த தசாப்தத்தில் ஏற்பட்ட விமான விபத்து
கோழிக்கோடுகேரள மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்கு உள்ளாகி ஓடுபாதையை விட்டு விலகி இரண்டு துண்டானது. இதில் 21 பேர் உயிரிழந்தனர்.மங்களூரு விபத்துகடந்த 2010ம் ஆண்டு மே 22ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகி பள்ளத்தில் விழுந்து உடைந்தது. இதில் 158 பேர் உயிரிழந்தனர்.பாட்னா2000ம் ஆண்டு ஜூலை 17 ல் அலையன்ஸ்ஏர் நிறுவனத்தின் போயிங் விமானம் தரையிறங்கம்போது விபத்துக்குள்ளானது. விமானியின் தவறால், கட்டுப்பாட்டை இழந்தது தெரியவந்தது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். டில்லியில்கடந்த 1996 ம் ஆண்டு நவ., 12ல் சவுதி அரேபியாவின் போயிங் விமானமும், கஜகஸ்தானின் விமானமும் டில்லி அருகே மோதிக் கொண்டன. விமானிகளின் தவறு காரணமாகவும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் தவறான தகவல் தொடர்பாலும் நடந்த விபத்தில் 349 பேர் உயிரிழந்தனர்.அவுரங்காபாத்மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் கடந்த 1993 ம்ஆண்டு ஏப்.,2 6ல் இந்தியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் டிரக் மற்றும் மின்சார கம்பங்கள் மீது மோதியது. இதில் 55 பேர் உயிரிழந்தனர்.இம்பால் விபத்துமணிப்பூர் மாநிலம் இம்பாலில் 1991 ம் ஆண்டு ஆக.,16ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.பெங்களூருவில்கடந்த 1990ம் ஆண்டு பிப்., 14ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூரு அருகே விபத்துக்குள்ளானதில் 92 பேர் இறந்தனர்.ஆமதாபாத் விபத்துகுஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 1988 ம் ஆண்டு அக்., 19 ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேர் பரிதாபமாக இறந்தனர்.மும்பை விபத்து 1982 ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி மும்பையில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் இறந்தனர்..மும்பைஏர் இந்தியாவின் போயிங் விமானம் கடந்த 1978 ஜன.,1 ல் மும்பையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 213 பேர் உயிரிழந்தனர்.