உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள்: சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா எல்லையில் அதிரடி

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள்: சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா எல்லையில் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு எதிராக கடும் தாக்குதலை, மூன்று மாநிலங்களின் நக்சல் ஒழிப்புப் படையினர், கடந்த ஐந்து நாட்களாக நடத்தி வருகின்றனர். 10,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் நக்சல்களை சுற்றி வளைத்துள்ளனர். இதனால், சரணடைவது அல்லது உயிரிழப்பது என்ற நிலைக்கு நக்சல்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படை

அடுத்தாண்டு மார்ச்சுக்குள் நாட்டில் நக்சல்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவர் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதையடுத்து, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக நக்சல்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். தெலுங்கானா, சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா மாநிலங்களின் எல்லையில், கடந்த 21ல் துவங்கிய நக்சல் எதிர்ப்பு தாக்குதல்களுக்கு, மூன்று மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதில், இந்திய விமானப்படையும் சேர்ந்துள்ளது. ஆட்கள் அணுக முடியாத காட்டுப் பகுதிகளில், வீரர்களை ஹெலிகாப்டர்கள் இறக்கி விடுகின்றன.அங்கு ஒவ்வொரு அங்குலமாக சல்லடை போட்டு தேடும் வீரர்களின் கண்களில் சிக்கும் நக்சல்கள் கொல்லப்படுகின்றனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று பெண் நக்சல்கள், அதிரடிப்படை வீரர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு நக்சல்களின் உடல்கள் மீட்கப்பட்டுஉள்ளன.இந்த மூன்று மாநிலங்களிலும், 10,000க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த தேடுதல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களால், வனத்தில் பதுங்கியுள்ள 500க்கும் மேற்பட்ட நக்சல்கள் வேட்டையாடப்படுகின்றனர். இதனால், சரணடைவது அல்லது துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாவது என்ற நிலைக்கு நக்சல்கள் தள்ளப்பட்டுள்ளனர்.நக்சல் தலைவர்களான ஹித்மா, தேவா, விகாஸ் மற்றும் தாமோதர் போன்றோர் தலைமையில் நக்சல்கள் சண்டையிட்டு வருகின்றனர்.நக்சல் எதிர்ப்பு வேட்டையில், அப்பாவி கிராம மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வனத்திற்குள் செல்லும் வீரர்களுக்கு, அந்தந்த பகுதி போலீசார் உதவி செய்து வருகின்றனர்.

மோதல்

ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்படுகின்றன.இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பாதிப்புகளை நக்சல்கள் சந்தித்து வருகின்றனர். எனினும், வனத்தில் நடக்கும் மோதல்கள் குறித்து, தெளிவான தகவல் இதுவரை இல்லை.நக்சல்கள் பதுங்குமிடமாக கருதப்படும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தான் பகுதியில் மட்டும், கடந்த நான்கு மாதங்களில், 350 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M R Radha
ஏப் 26, 2025 07:20

அமித்ஷாவின் அடுத்த துல்லியமான இலக்கு திருட்டு வாரிசு த்ரவிஷ குடும்பமாக இருக்கட்டும்.


Iyer
ஏப் 26, 2025 06:21

அமித் ஷாஹ் எடுக்கும் மிக சிறந்த நடவடிக்கையாகும் இது. இதே போல் காஷ்மீரிலும் நடவடிக்கை எடுத்து ஒரு பயங்கரவாதியையும் தப்பமுடியாதபடி சுட்டுக்கொலவது அவசியம்.


மீனவ நண்பன்
ஏப் 26, 2025 02:43

பஸ்தர் கான்கேர் ஜெகதல்பூர் பகுதிகளில் ஒரிசா ஆந்திரா சட்டிஸ்கர் முக்கோண பகுதிகளில் அபஸ்மாட் எனப்படும் தண்டகாரண்ய காடுகளில் கிராமங்களை இணைக்கும் சாலைகளை அமைக்க நக்சல்கள் தடையாக இருக்கிறார்கள் ராணுவ வீரர்கள் உதவியுடன் சாலைகள் அமைக்கப்படுகிறது அந்த பகுதிகளின் காடுகள் மரங்கள் கனிம வளங்கள் அரசியல்வாதிகளிடமிருந்து நக்சல்கள் காப்பாற்றுகிறார்கள்


தாமரை மலர்கிறது
ஏப் 26, 2025 02:05

வெரி குட். தீவிரவாதிகளை கொன்று குவிப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.