உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா கும்பமேளாவில் இதுவரை 10.8 கோடி பேர் புனித நீராடல்

மஹா கும்பமேளாவில் இதுவரை 10.8 கோடி பேர் புனித நீராடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரயாக்ராஜ்: உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் மஹா கும்பமேளாவில் இதுவரை 10.8 கோடி பேர் புனித நீராடி உள்ளதாக அம்மாநில அரசுக் கூறியுள்ளது.உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் கடந்த 13ம் தேதி முதல் மஹா கும்பமேளா நடைபெறுகிறது. அடுத்த மாதம் 26ம் தேதி வரை இது நடக்க உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். அங்கு நிலவும் கடும் பனியை பொருட்படுத்தாமல், தினமும் பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது. இந்தாண்டு கும்பமேளாவில் 45 கோடி பேர் புனித நீராடுவார்கள் என மாநில அரசு கூறியுள்ளது. இதனடிப்படையில் அவ்வபோது, புனித நீராடுபவர்களின் எண்ணிக்கையை மாநில அரசு வெளியிட்டு வருகிறது.இந்நிலையில், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இந்த நூற்றாண்டின் முதலாவது மஹா கும்பமேளா, புனிதமான அலகாபாத் நகரில் கடந்த 13ம் தேதி துவங்கியது. கடந்த 10 நாட்களில் 10 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி, கடவுளின் ஆசியை பெற்றுள்ளனர். இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து வரும் 29 ம் தேதி அமாவாசை வருகிறது. இது முக்கியமான நாள் என்பதால், அன்றைய தினம் புனித நீராடுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கான ஏற்பாடுகளில் மாநில நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

pmsamy
ஜன 26, 2025 08:12

கோடிக்கணக்கான மக்கள் ஒரு ஆத்துல குளிச்சா நோய்கள் வரும். மக்கள் அழிவை உயர்த்தும் சிறப்பான கும்பமேளா


J.Isaac
ஜன 25, 2025 20:52

எப்படி கணக்கிடுகிறார்கள் என்று விபரம் சொன்னால் நாட்டின் மொத்த ஜனத்தொகையை கணக்கிட எளிதாக இருக்கும்


veera
ஜன 25, 2025 22:44

நீ டாஸ்மாக்கில் எப்படி காலி பீர் பாட்டிலை எண்ணி கோனில போடுறியோ அதே மாறி.தான் ஐசாக்


Ramesh Sargam
ஜன 25, 2025 20:25

அத்தனை மக்கள் நீராடியும் நதி அசுத்தமாகாமல் இருக்கிறதா? ஆச்சரியம்தான். ஓம் நம சிவாய.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை