உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பியில் 121 பேர் இறந்த சம்பவம்: முக்கிய குற்றவாளி குறித்து தகவல் தந்தால் சன்மானம்; 6 பேர் கைது

உ.பியில் 121 பேர் இறந்த சம்பவம்: முக்கிய குற்றவாளி குறித்து தகவல் தந்தால் சன்மானம்; 6 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகர் பற்றி தகவல் தந்தால் ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.உ.பி.,யின் ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் திறந்தவெளியில், ஆன்மிகத் தலைவரான போலே பாபாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று முன்தினம்( ஜூலை 02) நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 121 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து, ஐஐி மாத்தூர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த 121 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுவிட்டன. முக்கிய குற்றவாளியான பிரகாஷ் மதுகரை பற்றி தகவல் தந்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும். கூட்ட நெரிசல் சம்பவத்தில் சதி இருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி

இதற்கிடையே, எப்.ஐ.ஆரில் சாமியார் போலே பாபாவின் பெயர் இடம் பெறாதது ஏன்? என காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Aap ki Chocobar
ஜூலை 05, 2024 10:01

சூப்பர் சாமி, சூப்பர். "கடவுள்" நம்பிக்கை இல்லாத ஒரு சாமியார் அப்படி போடுங்க சாமி


KRISHNAN R
ஜூலை 04, 2024 19:59

சென்னையில் ஒரு முறை விமான கண்காட்சி நடைபெற்ற போ து.... மாலை 5:30 மணியுடன் அனுமதி ரத்து என்பதால் கூட்டம் நுழை வாயிலில் அதிகமாக தேங்கி விட்டது. மேலும் வழி குறுகலாக.இருந்ததால்.. மக்கள் முண்டியத்தனர். அப்போது ஒருவர்.. அதிகாரிகளிடம்.. நிலைமை குறித்து சொல்லி..... வாயிலின் 50 அடி தூரத்தில் நிறுத்தி சிறிது சிறிதாக அனுப்ப வேண்டும் என்று சொன்னார். அதன் பிறகு வரிசை நேர்த்தியாய் சென்றது. அது போல் செய்திருக்க வேண்டும்


Swaminathan L
ஜூலை 04, 2024 18:18

கூட்டம் பெருகினால், ஒரு குறிப்பிட்ட இடப்பரப்புக்குள் அனைவரும் ஒரே நேரத்தில் இருக்க முயன்றால் நெரிசல் சாவுகள் நடப்பது தவிர்க்க இயலாது. நாடு பலமுறை இம்மாதிரி சோக நிகழ்வுகளைச் சந்தித்த பின்னும் நிர்வாகமோ, மக்களோ முன்னெச்சரிக்கையாக இருப்பதில்லை. ஹரித்வார் மஹா கும்பமேளாவில் கோடிக்கணக்கானவர்கள் கலந்து கொண்டாலும் சீர்பட நடத்த முடிகிறதே இங்கே அதீத உணர்ச்சிப் பெருக்கில் மக்கள் நெரிசல் அதிகமானது முக்கிய காரணம் இத்தனை சாவுகளுக்கு.


GMM
ஜூலை 04, 2024 18:13

அரசியல் சதிக்கு வாய்ப்பு உள்ளது.? பிஜேபியின் ஒற்றுமை குறைவு உ. பி. யில் மக்கள் விரோத கட்சிகள் வளர்ச்சி. கூட்ட நெரிசல் உருவாக்க முடியும். ? தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 40 க்கு 40. கள்ள சாராய சாவுகள். மம்தா மேற்கு வங்கத்தில், பகலில் தலிபான் பாணியில் கொலை, கட்ட பஞ்சாயத்து. காங்கிரஸ், திமுக கட்சிகள் மற்றும் அரசியல் வழக்கறிஞர் ஆதரவு கிடைக்கும் என்று குற்றவாளிகளுக்கு சட்டத்தின் பயம் தெளிந்து வருகிறது. ரேணுகா மீது FIR போட முடியுமா? FIR போடும் அளவிற்கு ஆதாரம் இருந்தால் காங்கிரஸ் கொடுக்கலாம்.


Vathsan
ஜூலை 04, 2024 17:55

போலே பாபாவின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை ஏன்? இவர் மேல் 5 பாலியல் வழக்குகளும் உள்ளன. அப்படி இருந்தும் இவர் சுதந்திரமாக நடமாடுகிறார்.


Balasubramanian
ஜூலை 04, 2024 17:41

அது ஏன், இவ்வளவு மக்கள் இறந்தது பற்றி சிறிதும் வருத்தம் தெரிவிக்காத பாபா குற்றவாளி இல்லையா? என்ன ஒரு ராவண ( பிறரின் துன்பத்தில் இன்புறும்) பாபா இவர்?


ramesh
ஜூலை 04, 2024 17:29

போலே பாபா தான் பிரசங்கம் பண்ணிய முக்கிய குற்றவாளி


Ramesh Sargam
ஜூலை 04, 2024 17:27

கட்சி பேதமில்லாமல் எல்லா கட்சியினரும் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்யவேண்டும். பிறகு செய்யலாம் அசிங்க அரசியல்.


D.Ambujavalli
ஜூலை 04, 2024 16:14

மக்களின் கண்மூடித்தனமான மூட பக்தியோ, நம்பிக்கையோ எதையோ வைத்து முன் ஏற்பாடுகள் ஏதுமின்றி, அநியாயமாக இத்தனை உயிர்களின் இழப்புக்குக் காரணமானவர்களை என்ன விதத்தில் தண்டிக்க முடியும்?


ஆரூர் ரங்
ஜூலை 04, 2024 17:05

அந்த சாமியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். வேணும்னா உங்க டீம்கால சேர்த்துக்கங்க.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை