உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் நக்சல்கள் 36 பேர் சுட்டுக்கொலை: போலீசார் அதிரடி

சத்தீஸ்கரில் நக்சல்கள் 36 பேர் சுட்டுக்கொலை: போலீசார் அதிரடி

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் போலீசாருடன் நடந்த என்கவுன்டரில் நக்சலைட்கள் 36 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.சத்தீஸ்கரில் நக்சலைட்கள் ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், அவர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நாராயண்பூர் - தாண்டேவாடாவின் நென்டுர்- துல்துலி பகுதியில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்புக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.இந்த மோதலில் நக்சலைட்கள் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், தானியங்கி துப்பாக்கிகள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். சமீப நாட்களில், நக்சல்களுக்கு எதிரான வேட்டையில் போலீசாருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி