உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களின் பாதுகாப்பு கருதி 16 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை; அவை என்னென்ன?

மக்களின் பாதுகாப்பு கருதி 16 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை; அவை என்னென்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

மக்களின் பாதுகாப்பு கருதி ஆரோக்கியத்திற்கு ஆபத்து என தெரிவித்து 16 பிக்ஸட்-டோஸ் காம்பினேஷன் மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், அறிவியல் பூர்வமாகச் சரிபார்க்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் மற்றும் அமலாக்க முகமைகள் இந்த உத்தரவுகள் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட தரப்பினரும் சட்டத்திற்கு இணங்க தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தடை செய்யப்பட்ட 16 மருந்துகளின் பட்டியல்:* அசிடைல் சாலிசிலிக் அமிலம் + எத்தோஹெப்டசைன் * டைக்ளோமைன் + பாராசிட்டமால் + கிளிடினியம் புரோமைடு* டைக்ளோமைன் + பாராசிட்டமால் + கிளிடினியம் புரோமைடு + குளோர்டையாஸெபாக்சைடு* கில்க்லாசைட் + குரோமியம் பிகொலினேட்* பாராசிட்டமால் + லிக்னோகைன்* அமோக்ஸிசிலின் + செராடியோபெப்டிடேஸ் + லாக்டோபாகிலஸ்* அமோக்ஸிசிலின் + க்ளோக்சாசிலின் + லாக்டிக் ஆசிட் பேசிலஸ் + செராடியோபெப்டிடேஸ்* அமோக்ஸிசிலின் + செராடியோபெப்டிடேஸ் * செபாட்ராக்சில் + புரோபெனசிட் * செபூராக்ஸைம் + செராடியோபெப்டிடேஸ் * அலோ வேரா (கற்றாழை) மற்றும் வைட்டமின் ஈ, விட்டமின் ஏ, ஜோஜோபா ஆயில், ஆரஞ்சு ஆயில், டீ ட்ரீ ஆயில் போன்ற மூலிகைகள் கலந்த 10 வகையான தோல் மற்றும் அழகு சாதனக் களிம்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இருமல் மருந்துக்கு தடை!

ஏற்கனவே டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல், இருமல் மருந்து உள்ளிட்ட சிரப்களை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக கடந்த 1945ம் ஆண்டு மருந்து விதிகளில் திருத்தம் செய்து இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V.Mohan
ஜூன் 20, 2026 19:19

ஆணன்டிபயாடிக்களுடன் சேர்ந்த கலப்பு கூட்டு மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன சரி. ஆனால் இவை தனித்தனியாக அதன் பெயர்களில் விற்க அனுமதி உள்ளதே இத் விடுங்க. ஜெனரிக் பெயரில் எந்த டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் தருகிறார்?. மேலும் 3 அல்லது4 டாக்டர்கள் சேர்ந்து, தாங்கள் அதிகமாக பிரிஸ்கிர்ப் செய்யும் மருந்துகளை தாங்களே சொந்தமாக கம்பெனி ஆரம்பித்து ஒரு சில ஆட்களை மட்டும் நியமித்து, பின் ஏதாவது மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் காண்டிராக்ட் போட்டு அவர்கள் தயாரித்து பிறகு மருந்துகளை தங்கள் கம்பெனி பெயரில் பாக்கிங் செய்து தஙகள் விருப்பமான விலையில் தங்கள நோயாளிகள் தலையில் கட்டி ஏராளமான லாபம் பார்க்கிறாராகள். அதை கொஞ்சம் கவனித்தால் தேவலை .


J.Isaac
ஜூன் 20, 2026 17:13

பாமர மக்களுக்கு இது புரியுமா.? அனைவரும் நீட் எழுதி மருத்துவர்கள் ஆனால் தான் புரியும்


ஆரூர் ரங்
ஜூன் 20, 2026 15:48

சம்பந்தா சம்பந்தமில்லாமல் இஷ்டத்திற்கு காம்பினேஷன் மருந்துகளை தயாரித்து விட்டு பிறகு அவற்றுக்கான மார்கெட்டிங் JUSTIFICATION காரணங்களை கற்பனையாக உருவாக்கி விற்பது மருந்து நிறுவனங்கள் நெடுநாட்களாக பின்பற்றும் நேர்மையற்ற உத்தி. ஏனெனில் தனியான வேதிப்பொருள் உள்ள மருந்துகள் அரசின் விலைக்கட்டுப்பாட்டு விதிகளுக்குள் வரும். ஆனால் காம்பினேஷன் மருந்துகளின் விலைக்கு உச்சவரம்பு கிடையாது போலிருக்கிறது. அதிக லாபத்திலிருந்து மனசாட்சியற்ற டாக்டர்களுக்கும் வாரி வழங்கலாம். எந்த வளர்ந்த நாட்டிலும் இதுபோன்ற நியாயமற்ற கூட்டு மருந்துகளைத் தயாரிக்க முடியாது. பாவம் இந்த நோயாளிகள்.


Aam Aathmi (Mango Man)
ஜூன் 20, 2026 15:39

சிகரெட் மதுவகைகள் இந்த லிஸ்டில் வருவதில்லையே


J.Isaac
ஜூன் 20, 2026 17:09

அரசின் நலன் கருதி


சமீபத்திய செய்தி