உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்டில் அதிகாலை சோகம்: பஸ், லாரி மோதியதில் கன்வார் யாத்ரீகர்கள் 18 பேர் பலி

ஜார்க்கண்டில் அதிகாலை சோகம்: பஸ், லாரி மோதியதில் கன்வார் யாத்ரீகர்கள் 18 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி; ஜார்க்கண்ட்டில் பஸ்சும், சரக்கு லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் கன்வார் யாத்ரீகர்கள் 18 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; மோகன்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுனியா வனப்பகுதி அருகே ஏராளமான கன்வார் யாத்ரீகர்களுடன் பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் அந்த பஸ்சும், கேஸ் சிலிண்டர் ஏற்றியபடி வந்துகொண்டிருந்த லாரியும் மோதிக் கொண்டன.இந்த விபத்தில் மொத்தம் 18 பேர் உடல்நசுங்கி பலியாகினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசாரும், மீட்புக்குழுவினர் உடனடியாக அங்கு விரைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து தும்கா போலீஸ் ஐ.ஜி,சைலேந்திர குமார் சின்ஹா கூறுகையில், 32 இருக்கைகள் கொண்ட பஸ்சும், கேஸ் சிலிண்டர்கள் ஏற்றியபடி வந்து கொண்டிருந்த லாரியும் மோதிக் கொண்டன. பலர் பலியாகி உள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார். விபத்து நிகழ்ந்துள்ள பகுதியானது தியோகர் எம்.பி., தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். இதையடுத்து, அத்தொகுதி எம்.பி., நிஷிகாந்த துபே, தமது சமூக வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; எனது தொகுதியான தியோகரில், கன்வார் யாத்திரையின் போது, பஸ் மற்றும் லாரி மோதிய விபத்தில் 18 பக்தர்கள் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை தாங்கும் வலிமையை பாபா பைத்யநாத்ஜி வழங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த விபத்து உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

nisar ahmad
ஜூலை 29, 2025 22:23

ஓ அப்படியா முஸ்லிமுடைய காரையெல்லாம் கவிழ்த்து முஸ்லிம்களை அடித்து முஸ்லிம் கடைகளை அடித்து உடைத்து நடத்தினார்களே அந்த யாத்திரை?


R S BALA
ஜூலை 29, 2025 14:15

மனித மரணங்கள் மதிப்பில்லாதவைகளாகி விட்டன இதுபோன்ற விபத்து மரணங்கள் வாழ்ந்துகொண்டிருப்பவர் வாழ்க்கையினை அர்த்தமற்றதாக்குகின்றன


Jayaraman
ஜூலை 29, 2025 11:20

Median இல்லாத அனைத்து சாலைகளிலும் , நடுவில், 2 அடி அகலத்திற்கு , வெள்ளை கோடுகளை விட்டு விட்டு போடுவது அவசியமாகும். இது காலத்தின் கட்டாயம்.


அப்பாவி
ஜூலை 29, 2025 11:18

யார் பொறுப்பு? மக்களா, மந்திரியா, சிவனா? என்னக் கேட்டா நேருதான் பொறுப்பு. உய்ரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.


Premanathan S
ஜூலை 29, 2025 10:27

ஆழ்ந்த இரங்கல். நாடு, மக்கள் ஏன் இப்படி ஆகிவிட்டது? பொறுப்பில்லாத்தனம்


முக்கிய வீடியோ