உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 50 வயது ஆணுடன் 18 வயது பெண் ஓட்டம்

50 வயது ஆணுடன் 18 வயது பெண் ஓட்டம்

ஹூப்பள்ளி,: ஹூப்பள்ளியில், 50 வயது நபர், 18 வயது இளம் பெண்ணுடன் ஓடினார். மகளை கண்டுபிடித்து தரும்படி போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.ஹூப்பள்ளியின் சாளுக்யா நகரில் 18 வயது இளம்பெண் வசிக்கிறார். இவரது தந்தை செக்யூரிட்டியாக உள்ளார். இதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் கோபி, 50, என்பவருக்கு திருமணமாகி, பிள்ளைகள் உள்ளனர்.இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி, அவர் பின்னால் சுற்றினார். வறுமையான குடும்பத்தை சேர்ந்த இளம்பெண், பிரகாஷ் கோபியின் வசதியை பார்த்து, அவரை காதலிக்க துவங்கினார்.வயதான நபரை, மகள் காதலிப்பதால், மனம் நொந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர் கடந்தாண்டு, போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும், பிரகாஷ் கோபி மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.இதற்கு பின், மகளை இங்கு வைத்திருந்தால் பிரச்னை ஏற்படும் என, கருதிய பெற்றோர், மஹாராஷ்டிராவின் கொல்லாபுராவில் உள்ள பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். ஆனால் ஜனவரி 3ம் தேதி, பாட்டி வீட்டில் இருந்து இளம்பெண், பிரகாஷ் கோபியுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார்.இது குறித்து, ஹூப்பள்ளி நகர் போலீசாரிடம் பெற்றோர் புகார் செய்து, மகளை கண்டுபிடித்து தரும்படி மன்றாடினர்.போலீசாரும் பல இடங்களில் தேடியும், 40 நாட்களாக இருவர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. பெற்றோரும், தங்கள்மகளின் போட்டோவுடன்,பல இடங்களில்தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

raja
பிப் 15, 2025 18:07

அட போங்க சார் 90ஸ் கிட்ஸ் இன்னும் பாவம் கல்யாணம் ஆகாமல் எத்தனையோ பேர் உள்ளனர் அந்த பெண்ணுக்கு அந்த 50 வயது பெரியவரைத்தான் பிடித்து விட்டது என்ன செய்ய இது கலிகாலம் ஆமாம் ஒரு பேச்சுக்கு, இன்னும் ஒரு இருபது வருடத்தில் அவர் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு 38 வயதாகும் அப்புறம் அடுத்த ஆளை தேடிபோகவேண்டும் இப்படியே போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்....


Minimole P C
பிப் 15, 2025 08:16

Modern girl. Knows the ways to lead a life.


முக்கிய வீடியோ