சட்டவிரோதமாக வசித்த 2 வங்கதேசிகள்
பஞ்சாபி பாக்: டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இரு வங்கதேசிகளை போலீசார் கைது செய்தனர்.மேற்கு டில்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் வசித்து வந்த சஜல் மியா, எம்.டி. அலி ஆகிய இரு வங்கதேசிகள், இங்கே சட்டவிரோதமாக தங்கியிருந்தனர்.இதுதொடர்பாக பஞ்சாபி பாக் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆவணங்களை சரிபார்த்தபோது, அவர்களின் விசா காலாவதி ஆனது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, ஒருவர் நாடு கடத்தப்பட்டார். மற்றவர் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.அவரை நாடு கடத்தும் பணிகள் நடந்து வருகின்றன.