உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்டவாளத்தில் ரீல்ஸ் எடுத்த 2 சிறுவர்கள் ரயில் மோதி பலி

தண்டவாளத்தில் ரீல்ஸ் எடுத்த 2 சிறுவர்கள் ரயில் மோதி பலி

எட்டாவா: உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தில், 'ரீல்ஸ்' வீடியோ எடுத்தபோது ரயில் மோதி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள ஹிரன்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அனுஜ் குமார், 18, ரஞ்சித் குமார், 16. குஜராத்தின் ஆமதாபாத் நகரில் பெயின்டர்களாக பணியாற்றிய இவர்கள், தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் காலை ரயில் தண்டவாள பகுதிக்கு இருவரும் வந்தனர். அங்கு தண்டவாளத்தின் மீது நின்றபடி மொபைல் போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்தனர். அப்போது, அவ்வழியே அதிவேகமாக வந்த ஹம்சபார் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், இருவரும் உடல் சிதைந்து உயிர்இழந்தனர். இதுபற்றி அறிந்த, அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், போலீஸ் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகள் அணிந்திருந்த செருப்பை வைத்து இருவரையும் அடையாளம் கண்டனர். போலீசார் வந்து இரு சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ