உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூரத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து: 2 பேர் பலி, மக்கள் வெளியேற்றம்

சூரத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து: 2 பேர் பலி, மக்கள் வெளியேற்றம்

சூரத்; சூரத்தில் ஜவுளி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.இதுபற்றிய விவரம் வருமாறு;ஜோல்வா என்ற கிராமத்தில் ஜவுளி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு எப்போதும் போல் தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது ஆலையில் ரசாயனம் நிரப்பப்பட்டு இருந்த டிரம் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.தகவல் அறிந்த பர்தோலி தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். மளமளவென எரிந்து கொண்டு இருந்த தீயை பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கட்டுப்படுத்தினர்.பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றிய அவர்கள், படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தீ விபத்தின் போது அருகில் இருந்த குடியிருப்பாளர்கள், வணிக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். சம்பவம் எப்படி நடந்தது என்பது தெரியாத நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை