உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  போதை பொருள் கடத்திய மாணவி உட்பட 2 பேர் கைது

 போதை பொருள் கடத்திய மாணவி உட்பட 2 பேர் கைது

திருவனந்தபுரம்: டில்லியில் இருந்து தமிழகம், கேரள மாநிலங்களுக்கு எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் கடத்திய நர்சிங் மாணவி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பந்தீரம்காவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மே மாதம் ஒரு கிலோ எம். டி. எம். ஏ. போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக முகமது பர்ஹான் என்பவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் டில்லியில் இருந்து எம்.டி.எம்.ஏ. சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டில்லியில் இருந்து போதை பொருள் அனுப்பும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. தனிப்படையினர் டில்லியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில் டில்லி அருகே நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதைப்பொருள் கும்பல் தங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சோதனை நடத்திய போது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரைச் சேர்ந்த முகம்மது அஜ்மல் 32, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் சூர்யா 23, கைது செய்யப்பட்டனர். அவர்கள் தமிழகம், கேரளம், கர்நாடகா மாநிலங்களுக்கு வாரம் தோறும் 10 கிலோ வரை எம். டி. எம். ஏ. சப்ளை செய்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து எம். டி. எம். ஏ. எடை போடுவதற்கான டிஜிட்டல் தராசு, பணம் எண்ணும் இயந்திரம், ஏ.டி.எம். கார்டுகள் உள்ளிட்டவை கைப் பற்றப்பட்டன. அவர்கள் பல கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் விற்பனை செய்ததும் உறுதி செய்யப்பட்டது. சூர்யா டில்லியில் நர்சிங் படித்து வருகிறார். இருவரும் கோழிக்கோடு அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சுந்தரம் விஸ்வநாதன்
செப் 15, 2026 13:10

சில ஆண்டுகளுக்கு முன் மதுரையை சேர்ந்த அரச குடும்பத்துக்காரார் ஒருவரின் மகன் அதிக போதை பழக்கத்தால் ஓராண்டுக்கு மேலாக வேலூர் சென்னை மருத்துவ மனைகளில் உள் நோயாளியாக இருந்து பல கோடிகள் செலவழித்து பாதி குணம் அடைந்துவிட்டதாக பத்திரிகைகளில் ஊடகங்களில் செய்திகள் வந்தன. அவரை விசாரித்தால் எங்கிருந்து யார் எப்படி இந்த வணிகம் நடக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாதா ? அவரை என் விசாரிக்க மறுக்கிறார்கள்?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 16, 2026 12:40

நீங்களே சொல்லி விட்டீர்கள், அரச குடும்பத்தவர் என்று .... எப்படி சட்டம் விசாரிக்கும் >> தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்களுக்கு ஒரு க்ளூ - தாலியறுப்பதில் குறியாக இருக்கும் ஒரு நபரை ஓசி சோறு என்று முதலில் அழைத்தவர் .....


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 15, 2026 11:25

போதைப்பொருள் கும்பலை தேடித்தேடி என் சி பி குழுவினர் அலைகிறார்கள். ஆனால் கடத்தல் கும்பலோ நோகாமல் சொகுசாக ஏ சி காரில் பவனி வந்து கடத்துகிறார்கள்.


Barakat Ali
செப் 15, 2026 10:41

கேவலப்படுத்துகிறார்கள் .... ஷரியத் படி தண்டனை கொடுக்க வேண்டும் .....


Lakshminarasimhan
செப் 15, 2026 08:12

இது கோர்ட் கேஸ் என்று இழுக்கப்பட்டு மிகவும் முக்கியமானவராக இருந்தால் ஜாமீன் பெற்று விடுவார் இதற்கு தக்க தண்டனை கொல்லுவது தான்


karupanasamy
செப் 15, 2026 05:25

மதத்தொழில் இது.


RAMAKRISHNAN NATESAN
செப் 15, 2026 11:08

ஹராம் - பாவச்செயல் - என்று சொல்லிக்கொண்டே அதைத்தான் செய்வார்கள் .....


வில்லிபுத்தூரான்
செப் 15, 2026 05:04

கடத்த உதவிய பெண் மதமாற்றம் செய்யப்பட்டு கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டாரா?


நரேந்திர பாரதி
செப் 15, 2026 05:47

அந்த மூஞ்சியை பாத்தாலே தெரியலையா?


புதிய வீடியோ