சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
தீஸ் ஹசாரி:எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, 'போக்சோ' நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கடந்த 2016 ஏப்ரல் 3ம் தேதி எட்டு வயது சிறுமி, நுாடுல்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை 28 வயது இளைஞர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.புகாரின்பேரில் அவரை கைது செய்த போலீசார், அவர் மீது மேற்கு மாவட்ட 'போக்சோ' கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பபீதா புனியா, 28 வயது இளைஞரை குற்றவாளி என அறிவித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் ஷரவன் குமார் பிஷ்னோய், குழந்தை பலாத்காரம் கொடூரமானது. குழந்தைகள், இந்த சமுதாயத்தின் விலைமதிப்பற்ற சொத்து. பாலியல் வன்முறையில் இருந்து அவர்களை பாதுகாப்பு மட்டுமல்ல, மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் சமூகத்தின் கடமை. எனவே, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 13.5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.