உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 பேருக்கு வேலை ரெடி! உடனே அப்ளை பண்ணுங்க!

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 பேருக்கு வேலை ரெடி! உடனே அப்ளை பண்ணுங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: யுனைட்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில், (United India Insurance) 200 காலி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 5.மத்திய அரசின் பொதுக் காப்பீட்டு நிறுவனமான யுனைட்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.Generalist- 100,Specialist- 100,

கல்வித் தகுதி என்ன?

Generalist பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில், 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.Specialist பணியிடங்களுக்கு பி.காம், பி.டெக் அல்லது எம்.காம், எம்.டெக்., முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்வது எப்படி?

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளிகள் கட்டணமாக ரூ. 250 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://uiic.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ