உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாப் 100 இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; முதலிடத்தில் அம்பானி

டாப் 100 இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு; முதலிடத்தில் அம்பானி

புதுடில்லி: இந்தியாவில் அதிக சொத்துக்களை வைத்துள்ள 100 பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தொழிலதிபர் முகேஷ் அம்பானி 9.55 லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளார்.2025ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்களின் பட்டியலை ஹுருன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் முதலிடத்தில் உள்ளது.அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 9.55 லட்சம் கோடியாகும்.கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தொழிலதிபர் அதானி, இந்த ஆண்டு 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் 8.15 லட்சம் கோடியுடன் இந்த இடத்தில் இருக்கிறார். 3வது இடத்தில் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ரூ.2.84 லட்சம் கோடியுடன் உள்ளார்.இந்தியாவில் கோடீஸ்வரர்களின் அதிவேக வளர்ச்சியை இந்தப் பட்டியல் வெளிப்படுத்துகிறது. தற்போது, இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளது. அதேபோல, இந்தப் பணக்காரர்கள் பட்டியலில் பெண் தொழில்முனைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை 56ல் இருந்து 358 ஆக உயர்ந்துள்ளது. 1687 பேர், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து வைத்துள்ளனர்.100 பேர் கொண்ட பட்டியலில் பணக்கார இந்தியர்களில் டாப் 10 லிஸ்டை இங்கு காணலாம்1.முகேஷ் அம்பானி -9.55 லட்சம் கோடி ரூபாய் 2.கவுதம் அதானி- 8.14 லட்சம் கோடி ரூபாய் 3.ரோஷினி நாடார் - 2.84 லட்சம் கோடி ரூபாய்4.சைரஸ் பூனாவாலா - 2.46 லட்சம் கோடி ரூபாய்5.குமார் மங்கலம் பிர்லா - 2.32 லட்சம் கோடி ரூபாய்6.நீரஜ் பஜாஜ் - 2.32 லட்சம் கோடி ரூபாய் 7.திலீப் சங்வி - 2.30 லட்சம் கோடி ரூபாய் 8.அசீம் பிரேம்ஜி - 2.21 லட்சம் கோடி ரூபாய் 9.கோபிசந்த் ஹிந்துஜா - 1.85 லட்சம் கோடி ரூபாய் 10.ராதாகிஷன் டமானி - 1.82 லட்சம் கோடி ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M Ramachandran
அக் 02, 2025 00:48

நம் தமிழ்நாடு அம்பானி கொடக்கல்லு பிரோதெரஸ் ஏத்தினாவது இடம்.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 01, 2025 20:40

3வது இடத்தில் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ரூ.2.84 கோடியுடன் உள்ளார். எங்கள் ஊருல பஞ்சாயத்து கவுன்சிலருக்கு இதைவிட அதிகமாக சொத்து இருக்கும்.


sankaranarayanan
அக் 01, 2025 20:37

இதில் உதயன்னன் பேரைக்காணோமே


ஜெய்ஹிந்த்புரம்
அக் 01, 2025 20:29

Thanks to Russian Oil and Modi government, Ambani is the richest Indian. The Tariff however is on us, public. சிறப்பு கொள்ளை லாபம் தனியாருக்கு, வரிச்சுமை பொதுஜனங்களுக்கு. சிறப்பு


Ragupathy
அக் 01, 2025 20:25

தமிழகத்தில் முதல் பத்து பணக்காரர்கள் யார் என்ற தகவல் வெளியிடலாமே.


உண்மை கசக்கும்
அக் 01, 2025 20:21

நம்ம திராவிடிய பசங்க பேரை காணோம்


Easwar Kamal
அக் 01, 2025 20:09

தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக போன ஆண்டு வரை சிவ நாடார் இருந்தார். இப்போது மகள் என்று சொல்லிக்கொண்டு ரோஷ்ணி நாடார் வந்து இருக்கிறார். அடுத்த ஆண்டு அந்த நாடாரும் இருக்காது. அதற்குத்தான் ரத்த சம்பந்தவர்கள் இருந்தால் அது காலத்துக்கும் இருக்கும்.


பாரத புதல்வன்
அக் 01, 2025 19:44

எங்க திராவிட மாடல் சர்வாதிகாரி எத்திணியாவது இடம்.... சொல்லுங்கய்யா...


மனிதன்
அக் 01, 2025 19:40

அப்புறம்... அதுக்காகத்தானே நம்ம ஜி ராப்பகலா, நாடு நாடா பறந்து பறந்து உழைக்கிறார்...


தாமரை மலர்கிறது
அக் 01, 2025 18:58

விரைவில் அம்பானி, பூனாவாலா மற்றும் அதானி நூறு லட்சம் கோடியை தொட வாழ்த்துக்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால், கோடீஸ்வர இந்தியர்களின் எண்ணிக்கை மிக பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. விரைவில் இந்தியா அமெரிக்கா ஆகிவிடும்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 02, 2025 09:32

82 கோடி இந்திய மக்களுக்கு, அதாவது இந்தியாவில் உள்ள 57% மக்களுக்கும் அதிகமாக, சாப்பாட்டுக்கு வழியில்லை என்பதற்காக இலவசமாக மாதமொன்றுக்கு ஆளுக்கு 5 கிலோ கோதுமை, குடும்பத்துக்கு 1 கிலோ பருப்பு என்று கோவிட் காலத்தில் ஆரம்பித்து இன்று வரையிலும் தொடர்கிறது. ஒன்றிய பட்ஜெட்டில் ஆண்டுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற வழியில்லாமல் தடுமாறும் 57% சதவீத மக்கள். இதே காலகட்டத்தில் கோடீஸ்வர நண்பர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 13 லட்சம் கோடி வரி விலக்கு அளித்துள்ளது. அதாவது 57% சநவீத மக்களுக்கு அடிப்படை உணவுக்காக தரப்பட்ட சலுகை, ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் இலவசமாக தந்துள்ளது இந்த ஒன்றிய அரசு.. இது தானா வளர்ச்சி?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை