உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  இஸ்ரோவிலிருந்து 25 சதவீத விஞ்ஞானிகள் வெளியேறினர்: திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்

 இஸ்ரோவிலிருந்து 25 சதவீத விஞ்ஞானிகள் வெளியேறினர்: திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நமது நிருபர் -

கடந்த மாதத்தில் மட்டும், 10 சதவீத விஞ்ஞானிகள், சமீப காலமாக, 25 சதவீத விஞ்ஞானிகள் வெளியேறி உள்ளதால், இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரோவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், நுாற்றுக்கும் அதிகமான முதல்நிலை விஞ்ஞானிகள் வெளியேறி உள்ளனர். சமீப காலமாக, 1,000க்கும் மேற்பட்டோர் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இது, இஸ்ரோவின் மொத்த பணியாளர்களில், 25 சதவீதமாகும். இதனால், இஸ்ரோவின் முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விஞ்ஞானிகள் ராஜினாமா செய்யவும் மற்றும் விருப்ப ஓய்வு பெறவும், விண்வெளி துறை தடை விதித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=96qnqzul&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த, 2020ல், மத்திய அரசின் விண்வெளி துறையானது, விதிகளை மாற்றி, தனியாரும் விண்வெளி திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பளித்தது. அப்போது, ஒரு நிறுவனம் மட்டுமே இதில் பங்கேற்றது. பின்னர், மத்திய அரசின் ஊக்குவிப்பால், 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மோஸ், பிக்சல், பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ், துருவா ஸ்பேஸ், திகந்தரா' உள்ளிட்ட 400 நிறுவனங்கள், இந்திய விண்வெளி ஆய்வில் இணைந்துள்ளன. இவை மிக வேகமாக, ராக்கெட் வடிவமைப்பு, செயற்கைக்கோள் கட்டமைப்பு, உந்துவிசை செயல்பாடுகளில் வளர்ந்து வருகின்றன. இவற்றுக்கு மிகவும் திறமையான விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, பணி ஏற்ற உடனேயே மிகப்பெரிய திட்டங்களுக்கு, தலைமை ஏற்கும் பொறுப்பு, பல மடங்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க முன்வருகின்றன. இதனால், தன்னிச்சையாக சாதிக்க துடிக்கும் இளம் விஞ்ஞானிகள், இஸ்ரோவில் இருந்து வெளியேற தொடங்கி உள்ளனர். ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளில் சிலர், புத்தாக்க நிறுவனங்களின் ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் செயல்படுகின்றனர். தாமதம் ஊழியர்கள் வெளியேறியதால், இஸ்ரோவின் இந்தாண்டு திட்டங்களான, 'ககன்யான் ஜி1, எஸ்.எஸ்.எல்.வி-.எல் - 1, ஜி.எஸ்.எல்.வி-. எப் - 17' உள்ளிட்டவை தாமதமாகி உள்ளன. மேலும், 10க்கும் மேற்பட்ட திட்டங்கள் கைவிடப்பட்டுள்ன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இரட்டை பி.எஸ்.எல்.வி., திட்டங்கள் தோல்வி அடைந்தன. இந்நிலையில், இந்த ஆண்டுக்குள் ஏழு விண்கலங்கள், ஆறு செயற்கைக் கோள்களை, இறுதி செய்யும் கட்டாயத்தில் இஸ்ரோ உள்ளது. மேலும், குலசேகரப்பட்டினம் விண்வெளி நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடப்பதால், சிறிய ரக ஏவுதல்களை, அங்கிருந்து நடத்தும் ஆய்வுகளும் நடக்கின்றன. அந்த பணிகள் பாதிக்காமல் இருக்க, விஞ்ஞானிகளின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வுக்கு, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

M S RAGHUNATHAN
ஜூலை 20, 2026 15:07

Scrap the Reservation in jobs and promotions. Talented persons are sidelined and juniors with less qualification and experience get accelerated promotion. This results in exodus of talented persons, who quit after putting in requisite service needed for pension. Also pay package should be commensurate with the talent and ution by sui variable allowances. All can not and should not be treated as equal. Failure to achieve desired level of performance should result in reduction of pay and perquisites. ACR and annual performance report should be carefully vetted and action taken. By not doing this resulted in the fall of HAL, Hindustan Photo Films, Hindustan Zinc, BHEL and many public sector enterprises.


S. Venugopal
ஜூலை 20, 2026 14:14

அரசுத்துறை சார்ந்த அறிவியல் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள நெபொடிசத்தினை ஒழித்து திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பளித்தால் நன்மை பயக்கும். இந்த தனியார் நிறுவனங்களை, அரசுத்துறை சார்ந்த அறிவியல் மற்றும் உயர் கல்விநிலையங்களை சார்ந்தவர்களை மட்டுமே வைத்து மேற்பார்வை செய்வதையோ, அவர்களின் திட்டங்களை பரிசீலானை செய்வதையோ அல்லது கட்டுப்பாடு செய்வதையோ மேற்கொள்வதை தவிக்க வேண்டும் ஏனெனில் மேயற ...டை நக்கற .....டு கெடுத்துவிடும். கோவிட் தடுப்பசியினை தயாரித்ததில் நமது தனியார் சோதனைச்சாலைகள் ஆற்றின பங்கினை நாமும் இந்த உலகமும் மறக்க முடியாது.


JeevaKiran
ஜூலை 20, 2026 12:36

இதற்கு முக்கிய காரணம், தனியாரை இஸ்ரோவில் நுழைத்ததுதான். அரசுக்கு ஒன்று புரியவில்லை. சில நிறுவனங்கள் முழுவதுமாக அரசின் கையிலேயே இருக்கணும். மிலிட்டரி, ரயில், விண்வெளி, தொலைதொடர்பு, ஆயுள் இன்சூரன்ஸ் , இன்னும் இதுபோல் பல


தமிழ்வேள்
ஜூலை 20, 2026 11:31

கோட்டா சிஸ்டம் என்ற கூமுட்டைத் தனம் உள்ள வரை அரசு நிறுவனங்களில் திறமையுள்ள நேர்மையான யாரும் பணிபுரிய விரும்ப மாட்டார்கள்... கோட்டா சிஸ்டம் தான் வேண்டும் என்ளால் இஸ்ரோ வுக்கு குருமா சுடலை சைக்கோ சைமன் போன்றகளை தலைவராக்கலாம்


Diraviam s
ஜூலை 20, 2026 10:25

Some of the private companies may get finance from our enemy countries, we need to be careful with theft of data by them. Please introduce Bond service for ISRO college pass outs like medical field. 40 Lakhs for PG seats for Non service candidates. Let them work for minimum number of years in Govt service.


Sivagiri
ஜூலை 20, 2026 10:23

ராணுவத்தில் பணியாற்றுவது போன்ற , விதிமுறைகள் கட்டுப்பாடுகள் கொண்டுவருவது , பெரும்பாலான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த , பாதுகாப்பு தொடர்பான , அரசுப் பணிகளுக்கு அமல்படுத்த வேண்டியது அவசியம் . . .


Nathansamwi
ஜூலை 20, 2026 12:20

Then whats the point of democratic and republic? Only in paper .?


Nathansamwi
ஜூலை 20, 2026 12:21

If you want to work for you pay more , provide privileges like ministers and judges... Dont simply blame them...


Sivagiri
ஜூலை 20, 2026 10:20

ராணுவம் போன்ற விதிமுறைகளை , கட்டுப்பாடுகளை , கொண்டுவருவது கட்டாயம் . . .


S.V.Srinivasan
ஜூலை 20, 2026 08:19

மத்திய அரசின் இந்த விபரீத முடிவு, அவர்களுக்கே வினையாக முடிந்து விட்டது.


பாமரன்
ஜூலை 20, 2026 07:19

பல வருடங்களாக மோனோபாலியாக இருந்த ஒரு துறையில் திடீர்னு கேட்டை திறந்து விட்டால் இந்த மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று. P


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 20, 2026 07:05

பாஸ் அதையும் தனியார் மயம் ஆக்கிட்டானுங்க, அதாவது காசு வாங்கிட்டு, இனி எவன் இங்க இருப்பான், தனியார் 2 மடங்கு சம்பளம் குடுப்பான்


முக்கிய வீடியோ