உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெளிநாட்டு வேலை ஆசை காட்டி மோசடி; உஷாரா இருக்கணும் மக்களே!

வெளிநாட்டு வேலை ஆசை காட்டி மோசடி; உஷாரா இருக்கணும் மக்களே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: பஞ்சாபில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய 25 டிராவல் ஏஜன்சிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.வெளிநாட்டு வேலை என்பது இன்றைய இளைஞர்களின் கனவு. அதற்காக பெரு முயற்சி எடுத்து பல்வேறு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள், டிராவல் ஏஜென்சிகளை அணுகி வேலை பெற்று வெளிநாட்டுக்கு பறப்பவர்களும் உண்டு. அப்படித்தான் பஞ்சாப் மாநிலத்தில் ஏராளமானோர் டிராவல் ஏஜென்சிகளின் கதவுகளை தட்டி உள்ளனர். ஆனால் அந்த ஏஜென்சிகள் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.மொத்தம் 25 டிராவல் ஏஜென்சிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த ஏஜென்சிகள் அனைத்தும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் வேலை தருவதாக முகநூல், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டு உள்ளனர்.அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகளையும், போலி வாக்குறுதிகளையும் நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தி உள்ளனர். ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலரும் போலீசை நாடினர். அமிர்தசரஸ், ஜலந்தர், ஹோசியார்புர், லூதியானா, பாட்டியாலா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின.இதையடுத்து, போலீசார் டிராவல் ஏஜென்சிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 25 ஏஜன்சிகள் உரிமம் இன்றி இயங்கி வந்ததும், வெளிநாட்டு வேலை என்று ஆசைகாட்டி ஏமாற்றியதும் தெரிய வந்தது. அனைத்து ஏஜென்சிகள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இது குறித்து ஏ.டி.ஜி.பி., பிரவீன் சின்ஹா கூறியதாவது; வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதற்கான உரிமங்கள் இந்த டிராவல் நிறுவனங்களிடம் இல்லை. மேலும், மேற்கத்திய நாடுகளுக்கு சட்ட விரோதமாக வேலைக்கு ஆட்கள் அனுப்பி இருப்பதையும் கண்டுபிடித்துள்ளோம். வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுபோன்ற போலியான வாக்குறுதிகளை அளிக்கும் டிராவல் ஏஜன்சிகளை நம்ப வேண்டாம், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
செப் 15, 2024 18:08

ரஷ்யா நட்பால் சாதாரண இந்தியக் குடிமக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. அமெரிக்காதான் லட்சக்கணக்கில் இந்தியர்களை வரவேற்று வேலையும்.குடுத்து பாதுகாக்குறது. ஆனா நாம போய் புட்டினைக் கட்டிப்புடிச்சு ஆயில் வாங்கி ஆதரவு தெரிவிப்போம். ப்ரிக்ஸ் BRICS நாடுகளோடு கை கோர்த்து டாலரை ஒழிப்போம்னு ஜல்லியடிப்போம்.


அப்பாவி
செப் 15, 2024 18:03

உள்நாட்டிலேயே ரெண்டு கோடி வேலைக்கு வழியில்லையாம். வெளிநாட்டு ஆளுங்களை நம்பலாமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை