உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 26 லட்சம் தீபங்கள்: அயோத்தியில் பிரமாண்ட ஏற்பாடு

26 லட்சம் தீபங்கள்: அயோத்தியில் பிரமாண்ட ஏற்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: தீபத்திருவிழாவிற்காக அயோத்தியில் இன்று ( 19ம் தேதி) 26 லட்சம் தீபம் ஏற்றி வரலாறு படைக்க பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தீபாவளி பண்டிகையை ஒட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி, கின்னஸ் உலக சாதனை படைக்கும் விழாவுக்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான இறுதி கட்டப்பணிகள் நடக்கின்றன.இன்று ( 19-ம் தேதி ) நடக்கும் விழாவில் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்களை ஏற்ற உள்ளனர். இந்த முயற்சியில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு தீபாவளிக்கு 25 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் ஏற்றப்பட்டு, இரண்டு கின்னஸ் உலக சாதனைகள் படைக்கப்பட்டன. அதை முறியடித்து புதிய சாதனை படைக்கும் நோக்கத்துடன் இந்தாண்டு தீபத்திருவிழா ஏற்பாடுகளை உ.பி., மாநில அரசு செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

xyzabc
அக் 19, 2025 02:40

இது ராமேஸ்வரத்தில் நடக்குமா? தீவாளி வாழ்த்துக்கள் கூட சொல்வதற்கு கூச்சப்படும் திருட்டு தலைகள் இருக்கும் வரை இது நடக்காது.


Varadarajan Nagarajan
அக் 18, 2025 21:54

திருவிழாக்கள், பண்டிகைகள் இவை அனைத்துமே மக்கள் வாழ்வாதாரம், பொருளாதாரம், மத நல்லிணக்கம், மக்களின் வாழ்க்கைமுறை போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. ஒரு ஊரில் திருவிழா என்றால் உறவினர்களின் வருகை, பலதரப்பட்ட மக்களின் வியாபாரம், அதனைசார்ந்த மக்களின் பொருளாதார வளர்ச்சி போன்ற பல விஷயங்கள் உள்ளன. நம் முன்னோர்கள் கட்டமைத்த விஷயங்கள் ஒன்றும் சாதாரணமல்ல. அவற்றில் பலவற்றை நாம் தொலைத்துவிட்டு அரசியல்மட்டும்தான் வாழ்க்கையென நினைக்கின்றோம். இந்தியாவின் தீபாவளி பண்டிகை ஒன்றில்மட்டும் நடைபெறும் பொருளாதார வளர்ச்சியை பல உலக நாடுகள் கண்டு வியக்கின்றனஎன்பது பலருக்கு புரிவதில்லை. இதில் நம்பிக்கையில்லாதவர்கள்தான் அரசியல்ரீதியான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.


KOVAIKARAN
அக் 18, 2025 21:29

தீப ஆவளி என்பது தான் தீபாவளி என்று அழைக்கப்படுகிறது. தீப என்பது விளக்கு, ஆவளி என்றால், ஒரே வரிசை வரம்பு தொடர்ச்சியான கோடு என்று பொருள்படும். எனவே தீப ஆவளி என்பது, தீபங்களை வரிசையாக ஏற்றி வைப்பதாகும். இது வட மாநிலங்களிலும், கேரளாவிலும் ஒவ்வொரு தீபாவளி அன்றும் வீட்டிலும் கோவில்களிலும் ஏற்றி வைக்கப்படுகிறது. இதூவும் தீபாவளி கொண்டாட்டங்களில் ஒன்றாகும்.எனவே இது போல அயோத்தி ராமர் கோவிலில் 26 லட்சம் விளக்குகள் ஏற்றிவைக்கப்போகின்றனர். நமது தமிழகத்தில், தீபாவளி என்றால், கூத்தாடிகளின் திரைப்படம் பார்ப்பது, சாராயம் குடிப்பது என்று தானே 200 ரூபாய் உபிக்களும் அவர்களை போன்றவர்களும் தெரியும் அதையேதான் அவர்களும் வருடா வருடம் செய்கிறார்கள். அவர்களுக்கு எங்கே தீப ஆவளியின் மகிமை தெரியப்போகிறது? அது தெரியாமல் தானே, முதல் தமிழன் என்ற பெயரில் வீணர்கள் இங்கே ஓலமிடுகிறார்கள்.


GMM
அக் 18, 2025 21:08

அயோத்தியில் லட்சம் தீபம். தமிழகத்தில் இருள் தீபம். ஶ்ரீ ராமேஸ்வரம் போன்ற முக்கிய கோவில்களில் தீபம் ஏற்றி மக்களை கொண்டாட செய்து மகிழ்வித்து இருக்கலாம். ஆனால் அசுரர் பிடியில் ஆலயம், மக்கள். 11 வயதிற்கு கீழ் பட்ட குழந்தைகளை வெடி வெடித்து மகிழ மன்றம் அனுமதித்து இருக்கலாம். ஊர் முழுவதும் ஒரே இரைச்சல். பட்டாசு கடைகள் ஊருக்கு ஒன்று? அதுவும் நீர், நிலம், ஆகாயம் எதிலும் வெடிக்காத பட்டாசு?


சிட்டுக்குருவி
அக் 18, 2025 20:51

முதல் தமிழன் முதல் தமிழனைப்போல சிந்திக்கணும் .பிற்போக்கு சிந்தனைக் கூடாது .இதனால் ஏற்படும் பொருளாதார ஆதாயத்தை சிந்திக்கணும் .எண்ணெய் உற்பத்தி ,அகல்விளக்கு உற்பத்தி அதனால் பயனடைபவர்கள் ,அதை ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்துபவர்களின் மனஓட்டத்தில் ஏற்படும் ஆரோக்கியமான மனநிலை ,அதனால் ஏற்படும் வேலைவைப்புகள் ,அதைக்கண்டு களிப்பவர்கள் மனதில் ஏற்படும் ஆரோக்கியம் இவை எல்லாவற்றையும் மீறி இதனால் மக்களிடையே ஏற்படும் மன ஒற்றுமை எல்லாவற்றையும் ஆராய்ந்தால் இது ஒரு அற்புதமான நிகழ்வாக தோன்றும் .அடுத்தவருடம் நீங்களும் ஒரு அகல்விளக்கு பரிசளிக்க விரும்புவீர்கள் .


முதல் தமிழன்
அக் 18, 2025 19:51

மன்னாராட்சியில் கூட இது மாதிரி சிறிதும் மக்களுக்கு உதவாத விஷயம் செஞ்சதா படிக்கவில்லை. எவ்வளவு பொருள் விரயம். நம் நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் தேவையற்ற செலவு செய்வது ஏன்??. இன்னும் நம் நாட்டில் சமத்துவம் பசியாறுவதில் நடக்கவில்லை.


தமிழ்வேள்
அக் 18, 2025 20:28

ஓய் பாய், இறைத்தூதர் வழியில் ஜிஹாத் செய்யணும்கறியா? இல்லை வலது கை சொந்தமாக்கிக் கொண்ட ஹுருலீன் விவகாரம் செய்யணுமா? இது ஹிந்து தேசம்... பாலைவன ராஜ்யம் அல்ல..


Kumar Kumzi
அக் 18, 2025 22:38

கள்ளக்குடியேறி ரோஹிங்கியா உமக்கு இந்தியாவில் என்ன வேலை ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை