உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 37 நாட்களில் 29 லட்சம் பேர் தரிசனம்: கடந்த ஆண்டைவிட 4.50 லட்சம் அதிகம்

37 நாட்களில் 29 லட்சம் பேர் தரிசனம்: கடந்த ஆண்டைவிட 4.50 லட்சம் அதிகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: சபரிமலையில் நடப்பு மண்டல காலத்தின் 37 நாட்களில் 29 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் இது கடந்த ஆண்டை விட நான்கரை லட்சம் அதிகம்சபரிமலையில் மண்டல கால சீசனுக்காக நவ., 15 மாலை 5:00 க்கு நடை திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு சீசனில் பக்தர்கள் காடுகளிலும், ரோடுகளிலும், சபரிமலை பாதைகளிலும் 24 முதல் 36 மணி நேரம் வரை காத்திருந்து சிரமப்பட்டனர். இதற்கு பல்வேறு மாநில அரசுகளும் கண்டனம் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு முன்னேற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டது.குறிப்பாக 18 படிகளில் பக்தர்களை ஏற்றுவது வேகப்படுத்தப்பட்டது. இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் நியமிக்கப்பட்டனர். அதுபோல ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது. இதனால் நடப்பு சீசனில் பெரிய அளவிலான புகார்கள் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.டிச., 21 வரை 28 லட்சத்து 93 ஆயிரத்து 210 பேர் தரிசனம் நடத்தியுள்ளனர். இது கடந்த ஆண்டை விட நான்கரை லட்சம் அதிகம். ஸ்பாட் புக்கிங் என்ற உடனடி முன்பதிவு மூலம் 5 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். புல் மேடு பாதை வழியாக 60 ஆயிரத்து 304 பக்தர்கள் வந்துள்ளனர்.இந்த சீசனில் டிச.19 மற்றும் 20 தேதிகளில் அதிகபட்சமாக ஒரு லட்சம் பக்தர்கள் தினசரி வந்துள்ளனர். டிச. 19, 20, 21 தேதிகளில் ஸ்பாட் புக்கிங் மூலம் தினமும் சராசரியாக 22,000 பேர் வந்தனர். ஒரு லட்சம் பக்தர்கள் வந்த நிலையில் பெரிய அளவுக்கு காத்திருப்பு இல்லாமல் தரிசனம் நடத்தி திரும்பினார். இது தேவசம் போர்டின் தகுந்த முன்னேற்பாடு மற்றும் கேரள அரசு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

mei
டிச 23, 2024 15:43

சனாதனம் வளர்கிறது, வாழ்க ??


Kumcoim
டிச 23, 2024 11:25

தமிழ்நாட்டில் இல்லாத சாமியா...


அப்பாவி
டிச 23, 2024 08:36

மக்களுக்கு கஷ்டம் அதிகமாயிருக்கா பக்தி அதிகமாயிருக்கா தெரியலியே


RAMAKRISHNAN NATESAN
டிச 23, 2024 08:14

சனாதனம் தழைத்தோங்குகிறதே கோவாலு ..... ஒங்கட்டுமே .... நான் ஒரு கிறிஸ்தவன் என்று பெருமையுடன் கூறுவேன் .... சங்கிகளுக்கு இதனால் வயிற்றெரிச்சல் .... நான் இப்படிப்பேசும்போதெல்லாம் எங்கூட்டு மாப்பிள்ளை மேல குத்தம் கண்டுபுடிக்கிறதை சங்கிகள் மறந்துருவங்கள்ல ????


முக்கிய வீடியோ