மேலும் செய்திகள்
ஸ்வரலயா நடன சங்கீத உற்சவம் 21ல் துவக்கம்
20-Dec-2024
பெங்களூரு; ஹம்பி உற்சவம் பிப்ரவரி 28 முதல் மூன்று நாட்கள் நடத்த முதல்வர் சித்தராமையா ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, மாவட்ட பொறுப்பு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.விஜயநகராவின் ஹம்பி உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். ஏராளமான கோவில்களும் உள்ளன. ஆண்டுதோறும் ஹம்பியில் மூன்று நாட்கள் உற்சவம் நடக்கும். இதில் கலை, கலாசார நிகழ்ச்சிகள், நாடகங்கள், மேளாக்கள், கண்காட்சி நடப்பது வழக்கம். விஜயநகர சாம்ராஜ்யத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும்.நடப்பாண்டு பிப்ரவரி 28 முதல் மூன்று நாட்கள், ஹம்பி உற்சவம் நடத்த சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஜமீர் அகமது கான், நேற்று காலையில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். ஹம்பி உற்சவத்துக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.இதன்படி ஏற்பாடுகளை துவக்கும்படி, விஜயநகரா மாவட்ட கலெக்டர் திவாகருக்கு, அமைச்சர் உத்தரவிட்டார். பிப்ரவரி 28ம் தேதி, ஹம்பி உற்சவத்தை முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். மார்ச் 1 மற்றும் 2ம் தேதிகளில் நிகழ்ச்சிகள் நடக்கும். கடந்தாண்டை விட, இம்முறை அதிக மக்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
20-Dec-2024