உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் பணம்: விசாரிக்க 3 பேர் குழு அமைப்பு

டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் பணம்: விசாரிக்க 3 பேர் குழு அமைப்பு

புதுடில்லி: டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் எடுக்கப்பட்டதாக வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். மேலும், அவருக்கு நீதித்துறை சார்ந்த எந்த பணிகளையும் ஒதுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.டில்லி ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா, 56. இவர், டில்லி துக்ளக் சாலையில், நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார்.இவரது வீட்டில், கடந்த 14ம் தேதி இரவு 11:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி வீட்டில் இல்லை.அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்களும், டில்லி போலீசும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.அப்போது அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில், கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணக்குவியல்களை போலீசார் கண்டெடுத்ததாக தகவல் வெளியானது.அதில், கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் இருந்ததாகவும், சில கோடி ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்தனர்.அந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு அதை அனுப்பி வைத்தது. இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் துறை ரீதியிலான விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.மேலும், அவர் ஏற்கனவே பணியில் இருந்த அலகாபாத் ஐகோர்ட்டிற்கே அவரை பணியிட மாற்றம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது.ஆனால், 'அப்படி எதுவும் பணம் கைப்பற்றப்படவில்லை' என, டில்லி தீயணைப்பு படை தலைவர் நேற்று இரவு திடீரென மறுப்பு தெரிவித்தார்.இந்நிலையில் யஷ்வந்த் வர்மா குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்து உள்ளார். இக்குழுவில், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜிஎஸ் சாந்தவாலியா, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.மேலும், யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த நீதித்துறை பணிகளையும் ஒதுக்க வேண்டாம் என டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளார். யஷ்வந்த் வர்மா விவகாரம் குறித்து டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி தாக்கல் செய்த அறிக்கை மற்றும் ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

venugopal s
மார் 23, 2025 12:40

காலையில் ஒரு பேச்சு மாலையில் ஒரு பேச்சு என்று இல்லாமல் முதலில் பணம் எடுத்தீர்களா இல்லையா என்பதை சொல்லுங்கள்!


Nandakumar Naidu.
மார் 23, 2025 12:21

குழுவில் உள்ள நீதிபதிகளும் விலை போகாத நீதிபதிகளாக இருக்க வேண்டுமே?


M R Radha
மார் 23, 2025 08:17

சந்துருகளும் கர்ணன்களையும் உருவாக்கிய கள்ள கொலிஜியும் வாழ்க


J.Isaac
மார் 23, 2025 08:15

இதுவரை ஒன்றிய அரசு மெளனம் சாதிக்கிறதே?


M R Radha
மார் 23, 2025 11:03

மௌனம் சாதிக்கவில்லை, விசாரித்துக் கொண்டிருக்கிறது. த்ரவிஷன்கள் பல லட்சம் கோடி ஏப்பம் விட்ட ஊழல் கணக்குகளையும் மத்திய அரசு சீரியஸாக விசாரித்து விட்டு ஆப்பு வைக்க காத்திருக்கிறது


अप्पावी
மார் 23, 2025 07:04

எல்லார் வுட்டிலேயும் உடனடியாக சோதனை நடத்தப் படவேண்டும். எல்லா புற்றிலேயும் பாம்பு இருக்கும்.


venkatesan B
மார் 23, 2025 11:16

Very bad


வரதராஜன்
மார் 23, 2025 00:59

இவர் யார் யாருக்கு சாதகமா தீர்வு சொல்லியிருக்கிறார் என்று பார்த்தாலே போதும் அது வேற ஆளுங்கட்சி சாதகமாக எதிர்க்கட்சி சாதமாவோ சொன்னா எதிர்க்கட்சிக்காரர்களுக்கு சாதமான இப்ப ஆள பெருசாகி இருப்பாங்க இல்லை இவர் ஏதாவது மேல்சபை எம்பியாக இருக்கும் நினைச்சுட்டு இருக்காங்களே என்னமோ


Anantharaman Srinivasan
மார் 22, 2025 23:23

டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் மாட்டிய பணம்: விரும்பியபடி அறிக்கை தர வளைந்து கொடுக்கக்கூடிய 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைப்பு


Anantharaman Srinivasan
மார் 22, 2025 23:17

நீதிபதி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பணத்தை மறைக்க முயற்சி. பணமே கைப்பற்றப்படவில்லை என்று தீயணைப்புத்துறை தலைவர் பல்டியடித்துள்ளார். இதுதான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதென்பது.


GMM
மார் 22, 2025 23:00

தீயணைப்பு அதிகாரி மின் கசிவில், காஸ் கசிவில் தீ என்று பேட்டி தரலாம். கணக்கில் வராத பணம் போன்றவை அரசு காவலர் பணி. உள்த்துறை உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு தகவல் கொடுத்தது சரியே. ஆனால், வருவாய் புலானய்வு அமைப்புகள் விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்க வேண்டும். பணம் கைப்பற்றி கருவூலத்தில் இருக்க வேண்டும். நாட்டில் 2 அரசியல் சட்டம் கிடையாது. இனி ஊழல் அரசியல் வாதிகளை கட்டுப்படுத்த முடியாது. சும்மா இருக்க மாட்டார்கள். குற்றம் வெளிப்பட்ட பின் மக்களை சாந்த படுத்த நடவடிக்கை அவசியம். மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வரும் என பயந்து செயல்பட கூடாது. சட்ட பூர்வ அமைப்பு இருக்கும் போது விசாரணை குழு எதற்கு. ?.


Sivagiri
மார் 22, 2025 22:53

இவங்களுக்கு, சிபிஐ, ஈ.டி, ஐ.டி, சிஐடி, இவங்கல்லாம் வர மாட்டாங்களா? தேவலோகத்து இந்திரர்களா? சட்டம் - இவர்களுக்கு பின்னால்தான், கைகளை கண்ணைக் கட்டி நிற்க வேண்டுமா ? ,


முக்கிய வீடியோ