உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்டில் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்டில் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர் பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சண்டையில், நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் குழுவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து 3 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கும்லா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 3 பேர் உடல்கள் கைப்பற்றப்பட்டன என்பதை போலீஸ் செய்தி தொடர்பாளர் மைக்கேல் ராஜ் உறுதி செய்தார். அப்பகுதியில் மேலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை