உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது; ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது; ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது ராம்பன் மாவட்டத்தில் பேட்டரி சாஷ்மா என்ற இடத்தில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=380cq9j5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உடனடியாக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்த ராணுவ வீரர்கள் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மான் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வாகனம் கவிழ்ந்த பள்ளத்தாக்கில் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. இறந்தவர்களின் உடல்கள் ராம்பன் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. வாகன விபத்தில் வீரர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ramesh
மே 04, 2025 17:32

ஜெய்ஹிந்த் வீரர்களுக்கு வீர வணக்கம்


K.Uthirapathi
மே 04, 2025 17:27

அகால மரணமடைந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு, எனது இறங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து, அவர்களின் ஆன்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 04, 2025 17:04

தியாகிகளுக்கு அஞ்சலி.....


பா மாதவன்
மே 04, 2025 16:55

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வணக்கங்கள் நாட்டிற்காக தங்களது வாழ்வினை தியாகம் செய்த அவர்கள் ஆன்மாக்கள் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர்கள் குடும்பங்கள் நன்கு முன்னேற அன்பு பிரார்த்தனைகள்.


Nada Rajan
மே 04, 2025 16:42

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்... ஜெய்ஹிந்த்


சமீபத்திய செய்தி