உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம்னி பஸ்கள் விதிமீறலை கண்காணிக்க 30 குழுக்கள்

ஆம்னி பஸ்கள் விதிமீறலை கண்காணிக்க 30 குழுக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பொங்கல் விடுமுறையை ஒட்டி, அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க, 30 சிறப்பு குழுக்களை, போக்குவரத்து ஆணையரகம் அமைக்க உள்ளது.இதுகுறித்து, தமிழக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆம்னி பஸ்கள் அதிகரித்து இயக்கப்படும். பொங்கல் பண்டிகை நெருங்க உள்ளதால், ஆம்னி பஸ்கள் இயக்கம் அதிகமாக இருக்கும். எனவே, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.வரி நிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களும் காணப்படும்.இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க, தமிழகம் முழுதும், 30க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருப்பர். அடுத்த வாரம் முதல் இந்த சிறப்பு குழுக்கள் செயல்படும்.இக்குழுவினர், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவர். ஆம்னி பஸ்களில் விதிமீறல்கள் இருந்தால், அபராதம் விதிப்பது, 'பர்மிட் சஸ்பெண்ட்' போன்ற நடவடிக்கைகளை எடுப்பர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

bluebus
ஜன 05, 2025 15:57

எல்லாம் செட்டிங் தான், போட்டி கரெக்ட்யா போய்டும்.


Christopher
ஜன 05, 2025 13:16

எல்லா புஸ்ஸுமெய் பினாமி தான். ரெட் புஸ்சல போயி பாருங்க சென்னை நாகர்கோயில் ரூ 5000.


GoK
ஜன 05, 2025 12:39

இவனுங்களுக்கு வோட்டு போடற முட்டாளுங்க இருக்கிற வரேல ஒரு பிரச்சனையும் இல்ல


Anantharaman Srinivasan
ஜன 05, 2025 12:19

ஒவ்வொரு ஆண்டும் கண்துடைப்பு நாடகம். ஆம்னி பஸ்கள் ஓனர் 75% MP பினாமிகள். நேரிடையாக வாங்குவது ஒரு தொகை. சரியான Fare க்கு டிக்கெட் .. எங்கனம் மாட்டுவார்கள்.


KRISHNAN R
ஜன 05, 2025 10:41

உரிமையாளர்கள்.. யார்.. குழு உறுப்பினர் யார்...எல்லாம் ஒன்னுக்குள்ள.....


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜன 05, 2025 09:57

வேற என்ன மிரட்டி வசூலிக்க ஒரு உத்தி.


Venkateswaran Rajaram
ஜன 05, 2025 09:27

குழுக்கள் அமைத்து திராவிட மாடல்கள் கொள்ளையடிக்க போகிறார்கள்


கூமூட்டை
ஜன 05, 2025 09:25

இது தான் திராவிட மாடல். பேப்பரில் வரும்


Kasimani Baskaran
ஜன 05, 2025 08:10

ஒப்புக்கு நாலு புழுக்களை உருவாக்கி அடிக்கவேண்டியதை அடிக்கத்தான் போகிறார்கள்.


VENKATASUBRAMANIAN
ஜன 05, 2025 08:06

ஒவ்வொரு ஆண்டும் இதே கதை. மக்களை முட்டாளாக்குவதுதான் இவர்களது வேலை. திருட்டு கும்பல். இதுதான் திராவிட மாடல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை