உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனடா பிரதமருக்கு கட்டம் சரியில்லை; கணித்தார் எலான் மஸ்க்!

கனடா பிரதமருக்கு கட்டம் சரியில்லை; கணித்தார் எலான் மஸ்க்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கனடா பிரதமர் ட்ரூடோ வரவிருக்கும் தேர்தலில் வெளியேறுவார்' என அவரது அரசியல் எதிர்காலம் குறித்து உலக பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் சமூகவலைதள உரிமையாளருமான எலான் மஸ்க் கணித்துள்ளார்.காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரம், அவருக்கு உள்நாட்டிலும் உலக நாடுகள் மத்தியிலும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, கூட்டணி கட்சிகளும் விலகுவதாக கூறி, ட்ரூடோவுக்கு கிலியை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில், 'ஜெர்மனியில் சோசலிச அரசாங்கம் வீழ்ச்சி அடைந்து வருகிறது' என சமூகவலைதளத்தில் ஒரு பயனர் கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில் ,'கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவிருக்கும் தேர்தலில் காணாமல் போய்விடுவார்' என குறிப்பிட்டுள்ளார்.இதற்கு ஒரு பயனர், 'எலான் மஸ்க் கனடாவில் ட்ரூடோவை அகற்றுவதற்கு உங்கள் உதவி தேவை' என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் அக்.,20ம் தேதி 2025ம் ஆண்டிற்குள் அல்லது அதற்கு முன் நடக்கவிருக்கும் கனடா தேர்தலில் வெளியேறுவார் என எலான் கூறியிருப்பதாவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 2013ம் ஆண்டில் இருந்து லிபரல் கட்சியை வழிநடத்தி வரும் ட்ரூடோவுக்கு வரும் தேர்தல் சவாலாக இருக்கும் என கணித்துள்ளனர் அரசியல் வல்லுநர்கள். அவர் ஆட்சி அதிகாரத்தை இழக்கும் அபாயம் இருக்கிறது என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

நிக்கோல்தாம்சன்
நவ 09, 2024 21:13

பலர் பலவிதமாக கூறியிருந்தாலும் இலங்கை தமிழர்கள் தனித்து சொல்லியிருப்பது ஒரு நெருடலை தருகிறது ? ஒருவேளை மதம் மாறிய இலங்கை தமிழர்கள் தான் அப்படி கூறியுள்ளனரோ ?


KUMAR
நவ 08, 2024 18:32

கனடா தேய்கிறது, கனலிஸ்தான் வளர்கிறது, கனடாவை பிரித்து கனலிஸ்தான் வந்தாலும் ஆச்சரியமில்லை.


J.V. Iyer
நவ 08, 2024 17:54

தற்போதய கனடா பிரதமர் சீக்கிரம் தேர்தலில் தோல்வி அடைவது மட்டும் அல்ல, அரசியலைவிட்டே போய்விடுவது மட்டும் அல்ல, சிறையில் கம்பி எண்ண வாய்ப்புக்கள் அதிகம். இவர் ஒரு கனடா கெஜ்ரிவால்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 08, 2024 14:10

கனடா நாடு பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து பயங்கரவாதிகளுக்கு அடிமையாகி விட்டது. பாகிஸ்தானின் பிம்பம் கனடா. இதற்காக கனடா மிகப்பெரிய விலை கொடுக்க போகிறது. கனடா இனி வரும் காலத்தில் கூடிய சீக்கிரம் காலிஸ்தான் என அழைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.


Jay
நவ 08, 2024 13:41

இவரை பதவியிலிருந்து இறக்க இந்தியா சார்பில் அனைத்து முயற்சிகளும் all-out-effort எடுக்கப்படும், இதில் என்ன சந்தேகம்?


Rpalnivelu
நவ 08, 2024 12:16

உருதுவில் ஓர் பழமொழி உண்டு. காச்சரம் கான் மார்யதோ அல்லாஹ் குதா க்யா கரிங்கயே. அதாவது விதியை அல்லாஹ்வினால் கூட மாற்ற முடியாது


Murthy
நவ 08, 2024 13:09

"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்" .....தமிழ் .


N.Purushothaman
நவ 08, 2024 12:08

பயங்கரவாத ஆதரவு பிரதமர் என்றே இனி கனடா பிரதமரை அழைக்க வேண்டும் ...


RAMESH
நவ 08, 2024 12:05

இந்தியாவில் பப்பு மட்டும் திராவிட மாடல் ஒழியும்


Ramesh Sargam
நவ 08, 2024 11:16

கனடா பிரதமர் வரும் தேர்தலில் தோற்பார். பிறகு அவர் ஆதரிக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளாலேயே .... காணாமல் போய்விடுவார்.


Anand
நவ 08, 2024 10:44

அவன் காலிஸ்தான் தீவிரவாதிகளாலேயே அழிவான்...


புதிய வீடியோ