உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்: தலைமை நீதிபதி கவாய்

அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்: தலைமை நீதிபதி கவாய்

புதுடில்லி: விஷ்ணு சிலை விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து பேசிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ''நான் கூறியது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்,'' என்றார்.மத்திய பிரதேச மாநிலத்தில், யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட கஜூராகோ வளாகத்தில் இருந்த ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த 7 அடி உயரம் கொண்ட விஷ்ணு சிலையை புனரமைத்து மீண்டும் நிறுவ வேண்டும் எனக்கூறி ராகேஷ் தலால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த தலைமை நீதிபதி கவாய்,' இது முற்றிலும் விளம்பரத்துக்காக போடப்பட்ட வழக்கு. அந்த தெய்வத்திடமே ஏதாவது செய்யச் சொல்லுங்கள். கடவுள் விஷ்ணுவின் தீவிர பக்தர் எனக்கூறுகிறீர்கள். சில தலையீடுகளுக்காக விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இது முற்றிலும் தொல்லியல் துறை வரம்பில் வருகிறது. அனுமதி தரலாமா அல்லது வேண்டாமா என முடிவெடுக்க வேண்டியது அந்தத்துறை'' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.இந்தத் தீர்ப்பு வெளியானதும் சமூக வலைதளத்தில் நீதிபதி கவாய் பெயர் வைரலானது. அவர் குறித்து குறை கூறி கருத்துகள் பகிரப்பட்டன. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்து வழக்கறிஞர்கள் கடிதம் எழுதினர்.இந்நிலையில், வழக்கு ஒன்றின் விசாரணையின் போது தலைமை நீதிபதி கவாய் கூறுகையில், ''நான் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தவறான முறையில் சித்தரிக்கப்படுவதாக ஒருவர் கூறினார். நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். நேபாளத்திலும் இது போன்று தான் நடந்தது,'' என்றார்.அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ' தலைமை நீதிபதி கவாயை 10 ஆண்டுகளாக எனக்கு தெரியும். அவர் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் செல்கிறார். நியூட்டன் விதிகள் பற்றி நமக்கு தெரியும். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. தற்போது ஒவ்வொரு வினைக்கும் சமூக வலைதளங்களில் எதிர்வினை ஆற்றுகின்றனர்,'' என்றார்.மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில்,' நாம் ஒவ்வொரு நாளும் கஷ்டப்படுகிறோம். சமூக வலைதளங்கள் கட்டுக்கடங்காத குதிரை. அதை அடக்க வழியும் இல்லை,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

NATARAJAN R
செப் 19, 2025 12:31

இவர் ஏதோ அரசியல்வாதி போல் பேசுவதை பேசிய பிறகு என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப் பட்டது என்று பேட்டி தருகிறார். எல்லா தீர்ப்பும் இந்து மதத்திற்கு எதிராக. பிற மதம் என்றால் மத உரிமைகளில் தலையிட முடியாது என்று தீர்ப்பு. சனாதனம் பற்றி திரு உதயநிதி ஸ்டாலின் பேசிய வழக்கு இன்று வரை வேண்டும் என்றே தொடர்ந்து வாய்தா வழங்கப்படுகிறது. அனைத்து ஊழல் அமைச்சர்கள் திமுகவில் உயர் நீதிமன்றம் தண்டனை விதித்தால் அதை எந்த விதமான விசாரணையும் இன்றி அதற்கு தடை விதிப்பது. வழக்குகள் பற்றி கவலைப்படாமல் வழக்கறிஞர்கள் பார்த்து அவர்கள் விரும்பும் தடை உத்தரவு பிறப்பிப்பது. உச்ச நீதிமன்றம் தன்னை ஒரு முறை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டும்


Sadananthan Ck
செப் 19, 2025 08:08

இப்படி தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு பிரச்சினை வந்தவுடன் என் கருத்து தவறாக எடுத்கொள்ளபட்டது என்று விளக்க வேண்டியது இதையே ஒரு இந்து தலைவர் மற்ற மதத்தை பற்றி தவறாக பேசி என் கருத்து தவறாக எடுத்துகொள்ள பட்டது என்று சொன்னால் இவர்கள் விட்டு விடுவார்களா?


Vadamalai Nagarajan
செப் 19, 2025 07:59

இந்துமதம்தானே நீங்க என்னவேனாலும் சொல்லலாம் திரு. கவாய் அவர்களே.


M.Srinivasan
செப் 19, 2025 07:43

அனைத்து மதங்களையும் மதிப்பது உங்களின் தனிப்பட்ட விஷயம். நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லும் போது சட்டம் என்ன சொல்கிறதோ அதன் படி தீர்ப்பு கூறுங்கள். அதைவிடுத்து உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தீர்ப்பில் காட்டாதீர்கள்.


Ravi Kulasekaran
செப் 19, 2025 07:24

90 சதவிகிதம் இந்துக்களுக்கு இந்த நிலையில் தான் இருக்கிறது நாடு இந்துவீரோத சக்திகளின் அட்டகாசம் அதிகரிப்பு நிலமை மோசமடைய முன்பு இந்து நாடாக மாற்ற வேண்டும்


R.Varadarajan
செப் 19, 2025 07:09

திமிராக எதை வேண்டுமானாலும் உளரலாம் என நினைத்து இந்துக்களின் மனங்களை புண்படுத்தி பேசியவர் மற்ற மத உணர்வுகளை புண்படுத்தி பேசுவதற்கு திராணி இருக்குமா? நீதிமன்றம் இந்த வழக்கில் செய்வதற்கு ஏதுமில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகலாம் என சொல்லி இருக்கவேண்டும். இனியாவது இந்த வாய்க்கொழுப்பை தவிர்க்கவேண்டும் நல்லவேளை அதிமுக மாஜிக்கு உச்சபக்ஷ அபராதம் விதித்தது போல அபராதம் விதிக்காமல் விட்டது மனிதாபிமானமே


Kannapiran Arjunan
செப் 19, 2025 05:49

நீதிபதி கவாய் நீதி துறைக்கு கிடைத்த அருமையான நீதிபதி. பிஜேபி அரசுக்கு எதிரான ஆனால் நேர்மையான தீர்வுகள் வரவேற்க்கதக்கது.. அவரை குறை பேசுவதும் அறம் அல்ல. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" ...


Tetra
செப் 19, 2025 05:37

ஆணவத்தின்‌உச்சம். உச்சா நீதிமன்ற‌ நீதி ?பதிகள்


Gajageswari
செப் 19, 2025 05:13

பொறுப்பு உணர்வு தேவை.


Swaminathan
செப் 18, 2025 21:48

If he had been true to his words, he would not have made an irresponsible and utterly deplorable statement.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை