உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை தேர்ச்சி பெற வைத்திடுங்கள்: விடைத்தாளில் ரூ.500 உடன் 10ம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை

என்னை தேர்ச்சி பெற வைத்திடுங்கள்: விடைத்தாளில் ரூ.500 உடன் 10ம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாளை திருத்திய ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விடைத்தாளில் ரூ.500 உடன் மாணவர்கள் வைத்த கோரிக்கைகள், இணையத்தில் வைரலாகி வருகிறது.கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 4.27 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வி தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. விடைத்தாள்களில் ரூ.500 உடன் மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை கண்டு ஆசிரியர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். அந்தக் கோரிக்கைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மாணவர் தேர்வில் தேர்ச்சி பெற உதவுமாறு கேட்டுக்கொண்டு விடைத்தாளில் ரூ. 500 நோட்டை வைத்தார்.* மற்றொரு மாணவர் ரூ.500 ரூபாய் நோட்டு வைத்து, ''தயவுசெய்து என்னை தேர்ச்சி பெற செய்யுங்கள். என் காதல் உங்கள் கைகளில் உள்ளது,' என்று கூறியுள்ளார்.* 'நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலைத் தொடருவேன்' என்று மற்றொரு மாணவர் விடைத்தாளில் எழுதி இருந்தான்.* மற்றொருவர், 'இந்த ரூ. 500 உடன் தேநீர் அருந்துங்கள், ஐயா, தயவுசெய்து என்னை தேர்ச்சி பெறச் செய்யுங்கள்' என்று எழுதினார்.* மற்றொரு விடைத்தாளில், ஒரு மாணவர், 'நீங்க என்னை தேர்ச்சி பெற செய்தால், நான் உங்களுக்கு பணம் தருகிறேன்' என்று எழுதினார்.* 'நீ என்னை தேர்ச்சி பெறச் செய்யாவிட்டால், என் பெற்றோர் என்னை கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள்' என்று இன்னொருவர் கூறினார்.* சிலர் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற உதவினால் கூடுதல் பணம் தருவதாகவும், இந்த முக்கியமான தேர்வில் தேர்ச்சி பெறுவதைப் பொறுத்துதான் தங்கள் எதிர்காலம் இருக்கிறது என்றும் மாணவர்கள் முன் வைத்த கோரிக்கைகள் இணையத்தில் கலவையான விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Ashokkumar A
ஏப் 25, 2025 14:40

நிச்சயமா. இந்தக் கையெழுத்து மாணவர்கள் எழுதுவது போல் தெரியவில்லை. இது மிகவும் நேர்த்தியாகவும், பயிற்சி பெற்ற ஒருவரால் எழுதப்பட்டது போலவும் இருக்கிறது. மாணவர்களின் கையெழுத்து பொதுவாக வேகமாக எழுதப்படுவதால் அவ்வளவு தெளிவாக இருக்காது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது யாருடைய கையெழுத்தாக இருக்கும் என்று யூகிக்க முடிகிறதா?


DAMODARAN PADMANABAN
ஏப் 24, 2025 09:20

தமிழ் நாட்டில் இந்தா பிரச்சினை கிடையாது தேர்வில் கலந்து கொண்டால் போதும்


Ganesh NR
ஏப் 20, 2025 21:11

இவையெல்லாம் இங்குள்ள அரசியல் வாதிகளின் தூய்மைக்கு எடுத்துக்காட்டு... நல்லவேளை ஏதேனும் மிரட்டல் வாசகங்கள் இல்லை..திராவிடம் வாழ்க...


Jai Ganesh
ஏப் 20, 2025 19:50

போன் அனுமதி இல்லாத போது எப்படி வெளிவந்தது


Dharmavaan
ஏப் 20, 2025 18:11

இந்த வருங்காலம் பற்றி என்ன சொல்வது லஞ்சத்தின் மூலம் வேலையை முடிக்கலாம் என்ற மனப்போக்கு அபாயகரமானது .கர்நாடகாவில் அதிகமாகிவிட்டது எங்கு காங்கிரஸ் இந்தி கூட்டணி உள்ளதோ அங்கு இந்த நிலை கேவலம்


தமிழன்
ஏப் 20, 2025 15:37

வருங்காலத்தில் இந்த மாணவர்கள் அமைச்சர்களாக வருவார்கள்.


தமிழன்
ஏப் 20, 2025 15:26

கல்வியை விலை கொடுத்து வாங்க முடியும் என கற்றுக் கொடுக்கும் அரசாங்கம் என சொல்லப் போறாங்க


Pudhuvai Paiyan
ஏப் 20, 2025 13:11

ஆனால் எந்த கல்வி அதிகாரிகளும் ஆசிரியர் இட மாறுதலுக்கு பணம் கொடுக்கும்போது இதுபோல் செய்தி வெளியிடவில்லை. ஒருவேளை ஆசிரியர் பணம் வாங்குகிறீர்களா என்பதை பரிசோதிக்க இருக்குமோ


தமிழன்
ஏப் 20, 2025 15:38

வருங்காலத்தில் இவர்கள் அமைச்சர்களாக வருவார்கள்


SHANMUGAM
ஏப் 20, 2025 11:37

இந்த அரசாங்கம் ஈடுபாடுள்ள மாணவர்களைக் கொண்டிருக்கவில்லை. கற்பித்தல் நன்றாக இல்லை.


தமிழன்
ஏப் 20, 2025 15:39

பணம் கொடுத்து தானே பள்ளியில் சேர்க்கிறார்கள்.. பிஞ்சு மனதில் எதை விதைக்கிறோமோ அது தானே விளையும்.


Ramesh Sargam
ஏப் 20, 2025 11:25

ஆட்சியில் உள்ளவர்கள் ஊழல் செய்கிறார்கள். அதே பழக்கம் மக்கள் இடையில், மாணவர்கள் இடையில். அரசனே தவறு செய்தால், மக்களும் தப்பு செய்யத்தானே முயல்வார்கள்.


தமிழன்
ஏப் 20, 2025 15:41

தமிழக அரசின் அமைச்சர்கள் என்ன படித்து இருக்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள்.. படிக்காமல் இருந்தால் அமைச்சர் பதவி கூட கிடைக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை