உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி வீட்டில் எரிந்த ரூபாய் நோட்டுகள்; வீடியோவை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்

நீதிபதி வீட்டில் எரிந்த ரூபாய் நோட்டுகள்; வீடியோவை வெளியிட்டது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில், கத்தை கத்தையான ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, 56, டில்லி துக்ளக் சாலையில், நீதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இவரது வீட்டில், கடந்த 14ம் தேதி இரவு 11:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி வீட்டில் இல்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x4v2qc41&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்களும், டில்லி போலீசும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அப்போது அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில், சாக்கு மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணக்குவியல்கள் இருந்ததாக தகவல் வெளியானது. அதில், கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் இருந்ததாகவும், சில கோடி ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்துள்ளார். அதுவரை, யஷ்வந்த் சர்மாவுக்கு எந்த பணியும் ஒதுக்க வேண்டாம் என்றும் டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிட்டுள்ளார். யஸ்வந்த் வர்மா வீட்டில், கத்தை கத்தையான ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அளித்த அறிக்கையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கத்துடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.தீ விபத்து தொடர்பாக நீதிபதி யஸ்வந்த் வர்மா கூறியதாவது: தீப்பிடித்த அறை பூட்டப்படாமல் எப்போது திறந்தே இருக்கும். வீட்டுப் பணியாளர்கள், வீடு பராமரிக்கும் பொதுப் பணி துறை பணியாளர்கள் உள்பட எவரும் அங்கு செல்ல முடியும். அங்கு பழைய படுக்கை, உடைந்த பர்னிச்சர்கள் போன்ற பொருட்கள் இருந்தன. எனது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என் மீது சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது. என்னை சிக்க வைக்க சதி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

திண்டுக்கல் சரவணன்
மார் 24, 2025 14:44

தான் தன்னை விசாரிப்பது சரியான செயல் அல்ல . சிபிஐ போன்ற அமைப்பு விசாரித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பது தான் சரியாக இருக்கும்


N.Lakshmanan
மார் 24, 2025 08:35

தினம் தினம் நாட்டுக்காக உயிரை கொடுக்கும் நமது படை வீரர்கள் ஒருபக்கம், இவரை போன்ற கரையான் கள் ஒரு பக்கம்.


Sivaprakasam Chinnayan
மார் 23, 2025 19:42

தறுதலை கருத்து


அப்பாவி
மார் 23, 2025 18:48

பல்வேறு வழக்குகளில் மிகச் சிறப்பாக தீர்ப்பு வழங்கி சம்பாரிச்ச பணம். யாரையும் ஏமாத்தும் நோக்கம் அல்ல.


Ray
மார் 23, 2025 16:19

மத்திய மந்திரி மாநில முதல் மந்திரி யாரானாலும் பணம் கைப்பற்றப் பட்டாலும் இல்லாவிட்டாலும் உடனடி கைது வழக்குன்னுதான் நடக்கிறது. லாலு வழக்கு எப்போ முடியுமோ யாருக்கு தெரியும் செந்தில் பாலாஜி வழக்கு சில நூறு ஆண்டுகளாகலாம்னு சொல்றாங்க. இப்படியுள்ள இந்த ஆட்சியில் இந்த சம்பவம் நூதனமாக கையாள படுகிறது. போலீஸ் விசாரணை முதல் தகவல் அறிக்கை ரிமாண்டு ஜாமீன் நீதி மன்ற விசாரணை. லஞ்ச வழக்கானாலும் அமலாக்கத்துறை PMLA வழக்கு விசாரணை என்றுதான் உள்ளது. தற்காலிக பணி நீக்கம் துறை ரீதியான விசாரணை ஒன்றுமில்லை SIT விசாரணை மட்டுமே. உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறையானது.


சிந்தனை
மார் 23, 2025 14:46

இந்த நாட்டுல வெள்ளைக்காரன் வந்து... நீதிமன்றம்னு ஒன்னு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும்... 2000 தலைமுறையா, இந்த நாட்டுல குற்றமே இல்லை எல்லோரும் நல்லவங்களா இருந்தாங்க...


Ram Moorthy
மார் 23, 2025 14:16

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் மிக பிரபலமாக சொல்வார்கள் பிறகு பீரோ புல்லிங் கொள்ளையர்கள் இப்போது ஆன்லைன் திருடர்களை பற்றி பெருமை படுத்தி பேசி கொள்கிறோம் அந்த கொள்ளையர்கள் இப்போது படித்து விட்டு இப்போது அரசியல் வியாதிகளாக உயர் அரசு அதிகாரிகளாக பியூன் வரை லஞ்ச பணத்தில் மூழ்கி திளைக்கிறார்கள் நடுத்தர ஏழை மக்கள் இன்னுமும் வறுமையான நிலையில் கடன் வாங்கியே காலம் செல்கிறது எந்த பிடிப்பும் இல்லாமல்


Chandrasekaran Balasubramaniam
மார் 23, 2025 13:40

இதுக்கு ஒரு குழு அமைத்தாகிவிட்டது. இனி அவ்வளவு தான். அவனை இன்னொரு நல்ல இடம் அதுதான் தமிழ்நாடு இருக்கிறதே அங்கு மாற்றி விடலாம் கேஸ் முடியும் வரை. அதுதான் முடியாதே இந்த ஜென்மத்தில். இந்திய சட்டம் அப்படி. வளையும் நீதி.


saravanan
மார் 23, 2025 13:17

காலம் எப்படியெல்லாம் மாறிப் போய்விட்டது முன்பெல்லாம் திருட்டு பசங்க வீடு புகுந்த கொள்ளையடித்தால் நகை, பணம், சட்டி சாமாணம் என்று ஒன்று விடாமல் களாவாடிக் கொண்டு போய்விடுவார்கள். ஆனால் இப்போது மூட்டை மூட்டையாக பணத்தை கொண்டு வந்து தனியறையில் வைத்துவிட்டு அல்லது எரித்துவிட்டல்லவா ஓடிப்போகிறார்கள். கலி எந்தளவுக்கு முத்திபோய்விட்டது கடவுளே


Indhuindian
மார் 23, 2025 12:48

தீ பிடித்தது 14 ம் தேதி வெளியிலே செய்தி வந்தது 21 ம் தேதி. இந்த வூடகங்கள்ளாம் நடுவுலே இருந்த ஏஷு நாட்கலில் என்ன செய்தார்கள். சாதாரணமா நீதிபதிகள் வீட்டுலே ஆபீஸ் வேலைய செய்யாம இருக்கமாட்டாங்க கேசு கட்டை படிக்கிறது தீர்ப்பு எஷுதரது அன்னிக்கி கோர்ட்லே நடந்ததை நோடீஸை படிக்கிறது இதெல்லாம் வீட்டுலதான் செய்வாங்க. அதனால அவங்க வீடும் அரசாங்க அலுவலகம் மாதிரிதான். அங்கே தீபுடிச்சுதான்னா நிறைய கேசு சம்பந்தப்பட்ட தாஸ்தாவேஜுகள் எல்லாம் என்ன ஆச்சுன்னு இந்த மெடியாவெல்லாம் கேக்காதா ஒரு டி கடையிலே தீபுடிச்சா ரெண்டு நாளைக்கு டீ வி பாக்கரவகைகளையெல்லாம் கொடுமை படுத்தறாங்களே அதே மாதிரி இந்த நிகாஷ்சியயும் 15 ம் தேதியே கொண்டு வரவேணாமா. இப்போ கூட்டம் போட்டு 24 / 7 கூப்பாடு போட்டு அவங்க செய்யமறந்ததை வெளியிலே சொல்லமாட்டேங்கறாங்களே