உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெப்பம் அதிகரிப்பு: கோல்கட்டாவுக்கு திரும்பிய ஏர் இந்தியா விமானம்

வெப்பம் அதிகரிப்பு: கோல்கட்டாவுக்கு திரும்பிய ஏர் இந்தியா விமானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டோக்கியோவில் இருந்து டில்லிக்கு வந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது, உள்ளே வெப்பநிலை அதிகரித்ததால், கோல்கட்டாவில் தரையிறக்கப்பட்டது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து டில்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. அப்போது, விமானத்தின் உள்ளே தொடர்ச்சியாக வெப்பநிலை அதிகரித்தது. இது குறித்து பயணிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த விமானம் பாதுகாப்பாக கோல்கட்டாவுக்கு திருப்பி விடப்பட்டு அங்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு விமானத்தை பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். விமான நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், அவர்களை மாற்று விமானம் மூலம் டில்லிக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்து உள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இடையூறுக்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
ஜூன் 29, 2025 23:28

தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்களுக்கு வந்திருக்கு தொடர் சோதனை. எதற்காக இப்படி? பராமரிப்பு சரியில்லையா, அல்லது விமானங்கள் எல்லாம் பழைய விமானங்களா?


Anantharaman Srinivasan
ஜூன் 29, 2025 23:28

ஏர் இந்தியா மொத்த விமானங்களும் தமிழகயரசின் உள்ளூர் மாவட்டங்களில் ஓடும் பஸ்களைப்போல் பழைய டப்பாவாக தெரிகிறது. தினசரியா விமானங்களில் கோளாறு வரும்.?


sriram
ஜூன் 29, 2025 23:04

Air india all the flights are this issue


RK
ஜூன் 29, 2025 22:58

எல்லா பழைய தகர டப்பாவை காயலாங்கடைக்கு கொடுத்துவிட்டு புதிய விமானங்களை வாங்கி முறையான பராமரிப்புடன் உலக நாடுகளுக்கு போட்டியாக முதலில் வர வாழ்த்துக்கள்.


முக்கிய வீடியோ