உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோல்கட்டா மாணவி பலாத்காரம்: திரிணமுல் காங்., நிர்வாகிகள் கருத்தால் அதிர்ச்சி

கோல்கட்டா மாணவி பலாத்காரம்: திரிணமுல் காங்., நிர்வாகிகள் கருத்தால் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: கோல்கட்டாவில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளும் திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கோல்கட்டாவின் தெற்கு சட்டக்கல்லூரியில் படித்த மாணவி ஒருவரை அங்கு படித்த திரிணமுல் காங்., மாணவர் பிரிவு நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கும் கருத்துகள் அம்மாநில மக்களை மட்டும் அல்லாமல், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதில், அக்கட்சி எம்.எல்.ஏ.,வான மதன் மித்ரா, பாதிக்கப்பட்ட மாணவியை குற்றம்சாட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அந்த மாணவி, அங்கு சென்றிருக்காவிட்டால் பலாத்கார சம்பவம் நடந்திருக்காது. எங்கு போகிறேன் என யாரிடமாவது அவர் சொல்லியிருக்க வேண்டும். உடன் நண்பர்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், பலாத்காரம் நடந்து இருக்காது. குற்றச்செயலில் ஈடுபடுவோர், சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கின்றனர் எனக்கூறினார்.முன்னதாக திரிணமுல் எம்.பி., கல்யாண் பானர்ஜி கூறுகையில், நண்பர்களே, தனது நண்பரை பலாத்காரம் செய்தால் என்ன செய்ய முடியும்? பள்ளிகளில் போலீசாரை நிறுத்த முடியுமா? ஒரு மாணவருக்கு எதிராக மற்றொரு மாணவர் குற்றச்செயலில் ஈடுபட்டார். அவரை யார் பாதுகாப்பார்கள். இந்த குற்றச் செயல்களையும் , பாலியல் வன்கொடுமைகளையும் யார் செய்கிறார்கள். சில ஆண்கள் இதைச் செய்கிறார்கள். எனவே பெண்கள் யாருக்கு எதிராக போராட வேண்டும். வக்கிரமான ஆண்களுக்கு எதிராகவே போராட வேண்டும்.குற்றத்தில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். ஒரு நண்பர், தனது நண்பரை பலாத்காரம் செய்தால், அது எப்படி தவறாக இருக்க முடியும்.பாதுகாப்பு நிலை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி தான் உள்ளது. ஆண்களின் மனநிலை இப்படியே இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.இவ்வாறு திரிணமுல் நிர்வாகிகள், பலாத்கார சம்பவத்தை கண்டிக்காமல் இந்த வகையில் கருத்து தெரிவித்து வருவதற்கு பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Padmasridharan
ஜூன் 29, 2025 06:46

ஆண்களின் மனநிலை மட்டுமல்ல உடல்நிலையும் அப்படிதான் உள்ளது. இது கடவுளின் படைப்பு, குற்றம் சொல்ல இயலாது. ஒரு தாயின் வழிகாட்டியில் வளர்ந்த ஆண் இப்படி செய்ய மாட்டான். இந்திய பொருளாதாரத்தை வளர்க்க எல்லா தாய்மார்களுமே சம்பாதிக்க அரசு அனுப்பி விடுவதால் பிள்ளைகளை நல்வழியில் எடுத்துச்செல்ல வீட்டில் யாருமில்லாமல் தவிக்கின்றனர். அதற்கேற்றாற்போல் குற்றவாளிக்கு பின்னால் அரசு காவலர்கள் துணை இருக்கின்றது


Manaimaran
ஜூன் 29, 2025 03:46

சுட்டு தள்ள உத்தரவு குடு, பிறகு ஒரு பயல் நாட மாட்டான்


தாமரை மலர்கிறது
ஜூன் 29, 2025 01:32

அரசியல் பாதுகாப்பு இருப்பதால் தான் கேடுகெட்டவர்கள் தைரியமாக பலாத்தகாரத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழத்தில் நடந்தது. பொள்ளாச்சியில் நடந்தது. கோல்கட்டாவில் இப்போது நடக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் தமிழக அரசை கலைக்க வேண்டும்.


Natarajan Ramanathan
ஜூன் 29, 2025 00:36

திரிணமூல் கட்சியினரின் மனநிலை இப்படி இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும். இந்தியாவில் திரிணமூல், சமாஜ்வாடி மற்றும் தீயமுக கட்சிகள் தடை செய்யப்படவேண்டும்.


புதிய வீடியோ