உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் ஸ்டீல் தொழிற்சாலையில் விபத்து: 4 தொழிலாளர்கள் பலி: பலர் சிக்கியுள்ளதால் அச்சம்

சத்தீஸ்கரில் ஸ்டீல் தொழிற்சாலையில் விபத்து: 4 தொழிலாளர்கள் பலி: பலர் சிக்கியுள்ளதால் அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் ஸ்டீல் தொழிற்சாலையில் சிலோ( பொருட்களை மொத்தமாக வைக்க பயன்படும் களஞ்சியம் போன்ற உயரமான இரும்பினால் செய்யப்பட்ட உருளை) இடம்) சரிந்து விழுந்ததில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் உள்ள Kususm என்ற ஸ்டீல் தொழிற்சாலையில் ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டு இருந்தனர். அப்போது, சைலோ திடீரென சரிந்து விழுந்தது. இதில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். எத்தனை பேர் அங்கு பணியில் இருந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை.தகவல் அறிந்த மீட்புப் படையினர் , சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட வேண்டி உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் தொழிற்சாலை முன் கூடி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 09, 2025 21:45

இது மட்டும் தமிழ் நாட்டில் சேலம் ஸ்டீல் பிளான்ட்டில் நடந்திருந்தால், அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்வார், எல்லா கட்சிகளும் திராவிட விடியல் அரசு என்று கூவி கூப்பாடு போட்டிருப்பார்கள். இப்போ எவனும் இந்த பக்கமே எட்டிக் கூட பார்க்கவில்லை.


புதிய வீடியோ