மேலும் செய்திகள்
கலபுரகி சிறையில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு
17-Oct-2024
கலபுரகி: பைக், கார் மீது லாரி மோதிய சங்கிலி தொடர் விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் இறந்தனர்.கலபுரகி ஜேவர்கி ஹசனாபூர் கிராமத்தில், நேற்று காலை ஒரு லாரி சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த, லாரி தறிகெட்டு ஓடியது. எதிரே வந்த பைக், கார் மீது மோதியது. விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பினார். ஜேவர்கி போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர்.காருக்குள் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரும், சாலை ஓரத்தில் ஒருவரும் இறந்து கிடப்பதை பார்த்தனர். விசாரணையில் சாலையில் இறந்து கிடந்தவர் பைக்கில் வந்த ராகவேந்திரா, 35, காருக்குள் இருந்தவர்கள் முஜாகித், 30, உசேன் பீ, 45, மவுலா பீ, 50 என்று தெரிந்தது.காரில் சென்றவர்கள், ராய்ச்சூரின் ஹட்டிக்கு சென்றது தெரிந்தது. குடிபோதையில் லாரியை ஓட்டி டிரைவர் விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று, போலீசார் கருதுகின்றனர். தலைமறைவான டிரைவரை தேடுகின்றனர்.
17-Oct-2024