உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் வாகனம் கவிழ்ந்து 4 ராணுவ வீரர்கள் பலி

காஷ்மீரில் வாகனம் கவிழ்ந்து 4 ராணுவ வீரர்கள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 4 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 வீரர்கள் காயமடைந்தனர்.ஜம்மு-காஷ்மீரின் பந்திபூர் மாவட்டத்தில் சதார் கூட் பயேன் பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனத்தில் வந்துகொண்டு இருந்தபோது, குறுகிய வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lo51ksw3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தகவல் அறிந்தவுடன், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ நடந்த பகுதிக்கு விரைந்தனர். காயமடைந்தவர்களில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த பகுதியில் இதுபோன்ற சம்பவம் நடப்பது புதிதல்ல. அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது.கடந்த டிச.24 ஆம் தேதி அன்று கூட பூஞ்ச் மாவட்டத்தில் ஹரோயோ பகுதியில் நடந்தது. இதில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Azar Mufeen
ஜன 05, 2025 04:58

ஓட்டுநர் யார் என்று பாருங்கள், பின்னாடி அமர்ந்திர்ந்தவர்கள் யார் என்று பாருங்கள் ஓட்டுநர் கையில் கம்பை வைத்து செல்லும் அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம்


shakti
ஜன 04, 2025 16:32

ஓட்டுநர் யார் என்பது முக்கியம் ... மர்மநபர் ஆக இருந்தால் எச்சரிக்கை தேவை ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை