உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு முழுவதும் 4,866 பேர் கொரோனாவால் பாதிப்பு; 24 மணி நேரத்தில் 7 பேர் பலி

நாடு முழுவதும் 4,866 பேர் கொரோனாவால் பாதிப்பு; 24 மணி நேரத்தில் 7 பேர் பலி

புதுடில்லி: இந்தியாவில் இதுவரை 4,866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்தியாவில் நேற்று (ஜூன் 04) ஒரே நாளில் 564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை 4,866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் 112 பேரும், தமிழகத்தில் 213 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் பலியாகி இருக்கின்றனர். மஹாராஷ்டிராவை சேர்ந்த 3 பேரும், டில்லி மற்றும் கர்நாடகாவில் தலா இரண்டு பேரும் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்த ஏழு பேரில் ஆறு பேர் வயதானவர்கள் மற்றும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நிமோனியா போன்ற நோய்களால் அவதி அடைந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

J.Isaac
ஜூன் 05, 2025 19:30

தேர்தல் வந்தால் கொரனா வரும். கடந்த பத்து ஆண்டுகளாக இப்படி மக்களை திகில், பயம், கலக்கத்தில் வைத்து பாமர ஏழை மக்களை குழப்பத்தில் வைத்துள்ளார்கள்.


Nada Rajan
ஜூன் 05, 2025 17:31

கொரோனா தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்... மீண்டும் லாக்டோன் வந்த அந்த உலகம் தாங்காது போய்


Nada Rajan
ஜூன் 05, 2025 17:30

கொரோனா தொற்று பரவலை தடுக்க வேண்டும்


முக்கிய வீடியோ