உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேசத்தினர் 5 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேசத்தினர் 5 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்

அகர்தலா: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேசத்தினர் 5 பேர் திரிபுராவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது.மேற்கு திரிபுரா மாவட்டத்தில், வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். மேற்கு திரிபுரா மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததற்காக நான்கு பெண்கள் உட்பட ஐந்து வங்கதேச நாட்டினர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தினரை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது.அதேபோல், கிழக்கு அகர்தலாவில் உள்ள நார்த்கேட் பகுதியில், சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச பெண்கள் இரண்டு பேரும், ஒரு இந்திய தரகரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.அதேபோல், கோவாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த வெளிநாட்டினர் 79 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Svs Yaadum oore
ஜூன் 27, 2025 21:45

உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வங்க தேசத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் அந்நாட்டினர் அசாம் வழியாக தமிழ்நாட்டுக்குச் செல்ல முயற்சிக்கிறார்கள்” என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ....ஜவுளி தொழிலை நம்பி தமிழகத்துக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருகிறதாம் ...... இந்த பங்களாதேஷிகளுக்கு இங்குள்ள விடியல் ரேஷன் கார்டு ஆதார் கார்டு மத சார்பின்மையாக கொடுத்துவிடும் .. ....


Svs Yaadum oore
ஜூன் 27, 2025 21:42

இந்த பங்களாதேஷிகள் ஊடுருவலுக்கு உதவி செய்வது மேற்கு வங்கம் ....அங்கு ஆட்சி செய்யும் மேடம் ....இந்தியா-வங்கதேச எல்லையில், 3,000 கி.மீ நீளத்தில் வேலி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 1,050 கி.மீ. நீளத்தில், கிட்டத்தட்ட 600 கி.மீ. மேற்கு வங்கத்தில் மட்டுமே உள்ளது..ஆனால் அங்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. "வேலி அமைக்க தேவையான நிலம் கையகப்படுத்துதல் விஷயத்தில் மேற்கு வங்க அரசு தொடர்ந்து தடை ...காரணம் மேற்கு வங்க மேடத்தின் மத சார்பின்மை ....


venugopal s
ஜூன் 27, 2025 22:54

மத்திய பாஜக அரசு எல்லைப்புறத்தில் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்து கோட்டை விட்டு விட்டு மாநிலங்களைக் குறை கூற வெட்கமாக இல்லையா?


ஈசன்
ஜூன் 27, 2025 21:37

திருப்பூரில் மட்டும் வங்க தேசத்தினர் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள் என்று பல செய்திகள் வலம் வருகின்றன.


MARUTHU PANDIAR
ஜூன் 28, 2025 03:17

அவனுங்களை விசாரிக்காமல் குறைந்த சம்பளத்துக்கு வருவதால் வேலைக்கு வைக்கும் ஆட்களை ஈவு இரக்கமின்றி உள்ளே வைக்க வேண்டும். சய னால பேய்கள். அதுலயும் தொப்புள் கொடியான்னும் பார்க்கணும்.


Nada Rajan
ஜூன் 27, 2025 21:21

சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க வேண்டும்


Ramesh Sargam
ஜூன் 27, 2025 21:18

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அனைத்து வெளி நாட்டினரும் உடனே நாடுகடத்தப்படவேண்டும். கூடவே அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பவர்களும் நாட்டை விட்டே துரத்தப்படவேண்டும். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசியல் கட்சிகள் தகுதி நீக்கம் செய்யப்படவேண்டும். அவர்கள் இனி எந்த தேர்தலிலும் பங்கேற்கமுடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். நாட்டில் அமைதி நிலவவேண்டும். தாமரை மலரவேண்டும். எல்லோரும் சுபிட்சமாக வாழவேண்டும்.


முக்கிய வீடியோ