மேலும் செய்திகள்
விமான கண்காட்சிக்கு தாராள தண்ணீர் வசதி
10-Jan-2025
பெங்களூரு; எலஹங்கா விமானப்படை தளத்தில் ஐந்து நாட்கள் விமான கண்காட்சி நடப்பதன் எதிரொலியாக, பெங்களூரில் ஹோட்டல்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.மத்திய ராணுவ துறை சார்பில், பெங்களூரு எலஹங்கா விமான படை தளத்தில் வரும் 10 முதல் 14ம் தேதி வரை, ஐந்து நாட்கள் விமான கண்காட்சி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த விமான கண்காட்சியில் 15 நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.இவர்கள் தங்குவதற்கு வசதியாக, பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் அறை முன்பதிவு செய்து வருகின்றனர். எம்.ஜி.ரோடு, ரிச்மன்ட் சாலை உட்பட நகரின் மத்திய வணிக பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் 60 சதவீத அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்து அறைகளும் முன்பதிவாகும் என்று கூறப்படுகிறது.மேலும் எலஹங்கா விமான படை தளத்தை சுற்றியுள்ள ஹெப்பால், எலஹங்கா, நாகவாரா பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் அறை முன்பதிவு வேகமாக நடக்கிறது. இதனால் ஹோட்டல்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கட்டணமும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. சாதாரண நாட்களில் இருக்கும் கட்டணத்தை விட 30 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில், விமான கண்காட்சியின் கடைசி இரண்டு நாள், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஏராளமானோர் வருவர் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு 13, 14ம் தேதிகளில் எலஹங்காவை சுற்றியுள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
10-Jan-2025