வட மாநிலங்களில் கொட்டும் கனமழை: நிலச்சரிவுக்கு 5 பேர் பலி; வீடுகள் சேதம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உத்தராகண்ட், ஹிமாச்சல பிரதேசத்தில் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நேற்று ஐந்து பேர் உயிரிழந்தனர். பஞ்சாபிலும் இடைவிடாது பலத்த மழை பெய்வதால், பல்வேறு மாவட்டங் கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. பருவமழை துவங்கியதில் இருந்து, உத்தராகண்ட், ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மலைப்பகுதி இமயமலை பகுதியில் அமைந்துள்ள உத்தராகண்ட், ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீரில் அவ்வப்போது மேகவெடிப்பு காரணமாக அதிதீவிர கனமழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்படுவதோடு, விபத்துகளும் நடக்கின்றன. இதனால், அந்த மாநிலங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில், முக்கிய நீர்நிலைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மழை, வெள்ளத்தால் ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இந்நிலையில், ஹிமாச்சல் தலைநகர் சிம்லா மாவட்டத்தின் ஜங்கா பகுதியில் உள்ள டப்ளூ என்ற இடத்தில், கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில், வீரேந்தர் குமார், அவரது 10 வயது மகள் ஆகியோர் உயிரிழந்தனர். வெளியே இருந்ததால், வீரேந்தர் குமாரின் மனைவி உயிர் தப்பினார். இதே போல், சிம்லாவின் கோட்காய் பகுதியில் உள்ள சோல் என்ற கிராமத்தில், நேற்று அதிகாலை வீடு இடிந்து விழுந்ததில், மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். உத் தராகண்டில், கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முன்கட்டியா மலைப்பகுதியில், நேற்று காலை 7:30 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, இருவர் உயிரிழந்தனர்; ஆறு பேர் காயமடைந்தனர். இதே போல், பஞ்சாப், ஹரியானா, யூனியன் பிரதேசமான சண்டிகரின் பல இ டங்களிலும் கனமழை பெய்தது. அரசு விடுமுறை பஞ் சாபின் லுாதியானாவில் அதிகபட்சமாக, 21.6 செ.மீ., மழை பெய்தது. இடைவிடாத மழையால், அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், நாளை வரை அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கும் பஞ்சாப் அரசு விடுமுறை அறிவித்துள் ளது.
ஜம்மு - காஷ்மீரில் அமித் ஷா நேரில் ஆய்வு
ஜம்மு - காஷ்மீரில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று நேரில் பார்வையிட்டார். அவருடன், துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் சென்றன ர். வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஜம்மு விமான நிலையத்திற்கு அருகே உள்ள மங்கு சாக் கிராமத்துக்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி, அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார். அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளை நேரில் பார்வையிட்ட அமைச்சர் அமித் ஷா, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.