உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 5 லட்சம் ரூபாய் லஞ்சம் அதிகாரி கைது

5 லட்சம் ரூபாய் லஞ்சம் அதிகாரி கைது

புதுடில்லி: டில்லியைச் சேர்ந்த வர்த்தகருக்கு சொந்தமான இரு கடைகள் சட்டவிரோதமாக செயல்பட்டதாகக் கூறி சீல் வைக்கப்பட்டன. டில்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரிய அதிகாரி விஜய் மேக்கோ என்பவர், கடைகளில் வைக்கப்பட்ட சீல்களை அகற்ற, வாரியத்தின் மற்றொரு அதிகாரி 40 லட்சம் ரூபாய் கேட்டதாக, அந்த வர்த்தகரிடம் இடைத்தரகர் வாயிலாக தெரிவித்துள்ளார். லஞ்சம் தர விரும்பாத வர்த்தகர், இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.அவர்களது ஆலோசனையின் அடிப்படையில், முதல் தவணையாக 5 லட்சம் ரூபாயை வாரிய அதிகாரி விஜய் மேக்கோவிடம் வர்த்தகர் லஞ்சமாக கொடுத்தார்.அப்போது சி.பி.ஐ., அதிகாரிகள், விஜய் மேக்கோவை கைது செய்தனர். தொடர்ந்து டில்லியில் உள்ள அவரது வீடுகளில் நடந்த சோதனையில், 3.79 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ