உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெருநாய் கடித்து 5 பேர் படுகாயம்

தெருநாய் கடித்து 5 பேர் படுகாயம்

பாலக்காடு; பாலக்காடு அருகே, தெருநாய் கடித்து ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகே உள்ள காராப்பாறை என்ற இடத்தில், தெருநாய்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன், 68, பைஜு, 44, அமல், 23, வெளிமாநிலத் தொழிலாளிகளான கொல்கத்தா மாநிலத்தைச் சேர்ந்த ரூபேல், 34, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜுதீன், 38, ஆகிய ஐந்து பேரும், நேற்று காலை தெருநாய் கடித்து படுகாயமடைந்தனர்.காயமடைந்த ஐந்து பேரையும், மண்ணார்க்காடு தாலுகா மருத்துவமனையில் அப்பகுதி மக்கள் அனுமதித்தனர். அப்பகுதியில் தெருநாய்க்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், அவற்றை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை