உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்முவில் 50 பாக். பயங்கரவாதிகள் ஊடுருவல்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படைகள்

ஜம்முவில் 50 பாக். பயங்கரவாதிகள் ஊடுருவல்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு பிராந்தியத்தில் 50 பயங்கரவாதிகள் ஊடுருவி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ட்ரோன் மூலம் கண்காணிப்பு, சந்தேக நபர்களிடம் விசாரணை என பல அடுக்கு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.இந் நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள பீர் பஞ்சால் மலைத்தொடரின் தெற்கு பகுதியில் கிட்டத்தட்ட 40 முதல் 50 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பல்வேறு குழுக்களாக இவர்கள் பிரிந்து தங்கி உள்ளதாகவும் தெரிய வர, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை ஆரம்பித்து இருக்கின்றனர்.பூஞ்ச், கிஷ்துவார், ரஜௌரி, உதம்பூர், தோடா என பல பகுதிகளில் தீவிர சோதனையில் பாதுகாப்பு படையினர் இறங்கி உள்ளனர். ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் நபர்கள், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்ற கூடுதல் தகவலின் எதிரொலியாக, அவர்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல் பரிமாற்றங்கள் பற்றிய விவரங்களையும் பாதுகாப்பு படையினர் இடைமறித்து சேகரிக்க ஆரம்பித்துள்ளனர்.இரவுநேர ரோந்து, ட்ரோன் மூலம் கண்காணிப்பு என உச்சக்கட்ட தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகள் கூறி உள்ளனர். அவர்கள் மேலும் கூறி உள்ளதாவது;வழக்கமாக காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ பயன்படுத்தப்படும் வழிகள் அனைத்தும் ஏற்கனவே அடையாளம் கண்டு அடைக்கப்பட்டு விட்டன. நவீன தொழில்நுட்ப உதவியுடன் தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன. விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பெரிய குத்தூசி
ஜூலை 12, 2025 12:10

இந்த திராவிட தனமான தீவிரவாதிகள் இந்தியாவின் உள்ளே நுழைந்தவுடன் தாக்குதல் நடத்த மாட்டார்கள். இவர்கள் அடுத்த 6 மாதம் அல்லது ஒருவருடம் அடர்ந்த காடுகளின் குகை, உள்ளூர் ஸ்லீப்பர் செல் வீடுகளில் உள்ள பாதாள அறைகள் அல்லது சென்னை வரை கூட வந்து திராவிட கைக்கூலிகள் ஆதரவில் சென்னை புறநகர்களில் உள்ளூர் திமுக அரசியல் வாதிகள் ஆதரவுடன் ஆதார் பெற்று சென்னையில் தங்கி வெளியில் நடமாடி வருவார்கள். பாகிஸ்தானின் முதலாளிகள் சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா உளவுத்துறையின் உத்தரவு வரும்போது எதிரிகள் சொல்லும் இந்திய இடங்களில் தாக்குதல் நடத்துவார்கள். இந்த தீவிரவாதிகளின் ஊடுருவல் பாகிஸ்தானின் ஆதரவு வெறும் சில கோடி ருபாய்களுக்கான கூலி மட்டுமே. ராகுல் காந்தி, ஸ்டாலின், திருமால்வளவன், மம்தா, ஒவைசி, சீமான், விஜய் போன்ற இந்திய அரசியல் கைக்கூலிகளை வைத்து தீவிரதக்குதல்களை நடத்தியவுடன் இந்திய அரசியலில் குழப்பம் ஏற்படுத்த, பாகிஸ்தானுடன் போரை உருவாக்கி இந்திய பொருளாதாரத்தை நசுக்குதல், இந்தியாவை பொருளாதார ரீதியாக வளரவிடாமல் தடுக்கும் நோக்கம் போன்ற காரணங்களுக்காக இது போன்ற கூலிக்கு செயல்படும் தீவிர வாதிகளைஇந்தியாவில் தயார்படுத்தி வைப்பார்கள். ஒரிஜினல் உத்தரவு சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா அரசுகளின் உளவு அமைப்புகளில் இருந்து வரும், இதுபோன்ற வெளிநாட்டு உளவு அமைப்பின் செயல்படுத்தவே பாகிஸ்தான் இதுபோன்ற தீவிரவாதிகளை உள்ளே அனுப்பி காத்திருக்க வைக்கிறது. ஆதலால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி உள்ளூர் அரசியல் தூரோகிகளையும், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நபர்களையும் தயவுதாட்சம் பார்க்காமல் எலிமினேட் செய்யும் பட்சத்தில் உள்நாட்டில் ஏற்படும் தீவிரவாத தாக்குதல்களை தடுக்கலாம். திமுக போன்ற பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் மாநில அரசுகள் இருக்கும் வரை இந்தியாவுக்கு சான் ஏறி முழம் சறுக்கின நிலைதான் இந்தியாவிற்கு. மக்கள் விழிப்படைந்தால் மட்டுமே தீவிரவாத தாக்குதலை தடுக்கமுடியும். வோட்டுக்கு 200 வாங்கி தனது ஓட்டை விற்பதன் மூலம் தன்மானத்தை விக்கும் தமிழன் இருக்கும் நாட்டில் இதற்கு வாய்ப்பில்லை. ஜைஹிந்த்


ஆரூர் ரங்
ஜூலை 12, 2025 11:33

எல்லையில் 250 மீட்டர் வரை சுரங்கம் அமைத்து ஊடுருவுகிறார்கள். மேலும் சிற்றாறுகளில் நீந்தியும் வந்துவிடுகின்றனர். மொழிப் பிரச்சினை இல்லாததால் உள்ளூர் மக்களுடன் எளிதில் கலந்துவிடுகின்றனர். சில ஜமாத் மதரசாக்கள் இன்னும் பாக்.ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பது அடைக்கலம் கிடைக்க எதுவாகிவிடுகிறது. பாகிஸ்தானில் வேலையின்மை அதிகமாக இருப்பதால் கூலிப்படைக்கு எளிதில் ஆள் கிடைக்கிறது.


xyzabc
ஜூலை 12, 2025 10:38

ஆபரேஷன் சிந்தூர் மூலம் கதையை முன்பே முடித்து இருக்கனும்.


SENTHIL NATHAN
ஜூலை 12, 2025 10:28

ஏமாளிகள் இந்துக்களே அமர்நாத் யாத்திரை,இன்ப சுற்றுலா என்று கசுமிரூக்கு யாரும் போக கூடாது. ஆண்டாள் சுய தள இந்துக்கள் செயள்பாடட்ர மத்திய மாணிள அரஸுகல் கூருவதை நம்பி பனம் செலவு செய்து சூனியம் வய்த்து கொள்கின்றணர்


V RAMASWAMY
ஜூலை 12, 2025 08:52

அடங்காமல் பொறுமையை சோதிக்கும் இவர்களுக்கு தலை தூக்கமுடியாமல் பாடம் புகட்டவேண்டும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 12, 2025 08:40

50 நபர்கள் என்று எண்ணிக்கை வரை சரியாக சொல்கிறார்கள். அப்புறம் அவர்களில் ஒருவரைக்கூட உள்ளே வரும்போதே ஏன் கைது செய்யவில்லை என்று யாரும் கேட்காதீர்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 12, 2025 08:32

எப்படி ஊடுருவ முடியுது >>>> சத்தியமா புரியல .....


Muralidharan raghavan
ஜூலை 12, 2025 10:25

அதற்கு காரணம் அந்த இடம் சமவெளியல்ல. மலைப்பாங்கான இடங்கள். எல்லா இடங்களிலும் வேலி அமைக்க முடியாது. மிகுந்த சவாலான வேலை


subramanian
ஜூலை 12, 2025 08:01

தீவிரவாதிகள் 50 பேரையும் கைது செய்து, அவர்களின் உடலில் குண்டுகள் கட்டி, பாகிஸ்தான் மீது வீசுங்கள்.


S.L.Narasimman
ஜூலை 12, 2025 07:50

உள்ளூர் மக்கள் ஆதரவு இல்லாமல் பயங்கரவாதிகள் நுழைய முடியாது. அப்படி ஆதரவு தருவது சுற்றுலா மூலம் வரும் வருமானத்தை இழக்க நேரிடும். இதை அங்கு உள்ள மக்கள் மற்றும் அரசு புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு பயங்கரவாதிகளை கண்டதும் சுட்டு தள்ள வேண்டும்.


முக்கிய வீடியோ