உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் 51 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்; தேர்தல் கமிஷன் நடவடிக்கை

பீஹாரில் 51 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்; தேர்தல் கமிஷன் நடவடிக்கை

பாட்னா: பீஹாரில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது, 51 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.பீஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணி வரும் ஜூலை 25ம் தேதி உடன் நிறைவு பெற உள்ளது.இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் போது, இதுவரை 18 லட்சம் வாக்காளர்கள் இறந்து விட்டதாகவும், 26 லட்சம் பேர் வெவ்வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், 7 லட்சம் பேர் இரண்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.51 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. சிறப்பு தீவிர திருத்தத்தின்படி வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்டு 1ம் தேதி வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் அனைத்து தகுதி உள்ள வாக்காளர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.சட்டசபைத் தேர்தலுக்கு முன் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவது அதன் அரசியலமைப்பு கடமை. முழு செயல்முறையும் நிலையான மற்றும் அதிகார வரம்புக்குட்பட்ட முறையில் நடத்தப்படுகிறது. முக்கியமாக, வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரை புதிய வாக்காளர்கள் தொடர்ந்து சேர்க்கப்படலாம்.வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கும், சரி செய்வதற்கும் போதுமான நேரம் இருக்கிறது. வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி வெளிப் படையானதாக இருக்கும். இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தத்வமசி
ஜூலை 23, 2025 10:03

ஆதார்-வாக்காளர் அட்டை-பிறப்புச் சான்றிதழ்-பான் கார்டு-ஓட்டுனர் உரிமம் என்று பல கார்டுகள் கொடுப்பதை விட்டு ஒரே அட்டையாக கொடுத்து விடுங்கள். அதிலேயே இன்சுரன்ஸ் விபரங்களும் கொடுத்து விடுங்கள். ஆனால் வழங்குவதற்கு முன் பல முறை யாருக்கு வழங்கலாம், யாருக்கு வழங்கக் கூடாது என்று முடிவு எடுத்து கொடுங்கள். குழப்பம் இருக்காது. எல்லாவற்றையும் வாரி வாரி வழங்கி விட்டு பிறகு இது இல்லை, அது இல்லை என்று கூற வேண்டாம். இதற்கு நீதிமன்றங்களும் ஒரு காரணம். ஆதார் அட்டையை ஏன் இந்திய அடையாள அட்டையாக இந்திய குடியுரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே என்று செய்யக் கூடாது. எல்லாவற்றுக்கும் மக்கள் நீதிமன்றத்துக்கு செல்கிறார்கள். நீதிமன்றம் உடனே தடை விதிக்கிறது. அதனால் ஒரு இந்திய பிரஜையிடம் பல அட்டைகள் உள்ளன. அதற்கென்றே ஒரு பையை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பல நாடுகளில் உள்நாட்டவர்கக்கு ஒன்று, வெளிநாட்டவர்களுக்கு என்று ஒன்று என்று இரு விதமான அட்டையை கொடுத்து விட்டு அதிலேயே அனைத்தையும் இணைத்து விடுகின்றனர். அது போல இங்கும் ஏன் செய்யக் கூடாது ? இதை நீதிமன்றம் பரிசீலிக்கலாமே.


Kulandai kannan
ஜூலை 23, 2025 08:52

நூறு தகுதியான வாக்காளர்கள் விடுபடலாம், ஆனால் ஒரு அந்நியர் வாக்களிக்கக் கூடாது.


Karthik Madeshwaran
ஜூலை 23, 2025 04:37

Out of those 51 lakh people, 99% are from minority communities. This is a million-dollar question: why is the BJ Party targeting only minorities? What is the secret behind this? These people have been living in India for more than 30–35 years. Minority communities never vote for the BJ Party, so they are being removed from the voters list. To justify this, the BJ Party claims they are not Indians, but rather people who came from Bangladesh or Myanmar. A well-cooked story indeed by the BJ party


Ramakrishnan Sitaraman
ஜூலை 23, 2025 09:25

We are judgmental without knowing the truth. Hatred on a person or party can trigger tsunami of accusations without any strong base. EC is doing their job. Let us respect it. Anyone living illegally, doesnt matter even if it for decades, need to be thrown out. Why should we be at the receiving end of wrong verdicts in the polls due to illegal voters?


kannan
ஜூலை 23, 2025 00:22

தவறான நபர்களுக்கு ஆதார் அட்டையை யார் கொடுத்திருப்பார்கள்? அவர்களுக்கு என்ன தண்டனை என்பதையையும் சொல்லுங்கள் தைரியம் இருந்தால.


JaiRam
ஜூலை 22, 2025 23:53

சரியான நடவடிக்கை ஆனால் இங்கிலாந்து குடிமகன் ராகுலுக்கு பிடிக்காது


Kumar Kumzi
ஜூலை 22, 2025 23:15

கள்ளக்குடியேறி பங்களாதேஷ் மூர்க்கனுங்களை உதைத்து விரட்ட வேண்டும்


krishna
ஜூலை 22, 2025 21:45

DESA VIRODHA MAFIA MAINO CONGRESS MAMATHA BEGUM DRAVIDA MODEL KUMBAL I.N.D.I KOOTANI VANDHERI MIRUGA MOORGANUKKU PATTU KAMBALAM VIRITHU, INDHIAVAI ADAGU VAITHU PADHAVIKKU ALAYUM INDHA KEVALANGALAI NADU KADATHA VENDUM.


Shankar
ஜூலை 22, 2025 21:39

வாக்காளர் அடையாள எண்ணை ஆதார் என்னோடு இணைக்கும்பட்சத்தில் நாட்டில் எந்த மூலையில் இரண்டாவது பெயர் பதிவு செய்திருந்தாலும் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் தற்போது பங்களாதேஷ் நாட்டினரும் மிகவும் சுலபமாக ஆதார் அட்டையை பெற்றுக்கொள்கிறார்களே. இது மிகப்பெரிய ஆபத்தாகும். இதை முதலில் அரசு தடுக்கவேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜூலை 22, 2025 21:16

இந்த ஐம்பத்தொரு லட்சம் மக்கள் பங்களாதேஷ் அல்லது மியன்மார் ரோகின்யாவிலிருந்து வந்தவர்கள் என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இவர்களை நாடுகடத்த அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டுக்காரர்களுக்கு ஓட்டுரிமை கொடுத்து, ஜெயிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.


A viswanathan
ஜூலை 22, 2025 22:19

இந்திய குடிமகனாக இல்லாதவரை நீக்குவதில் தவறு இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை