வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாடெங்கிலும் மழைக்காலம். ஆற்றில் எப்பொழுது வெள்ளம் வரும் என்று தெரியாது. அப்படி இருக்கும்போது எச்சரிக்கையுடன் ஆற்றில் இறங்கி குளிக்கவேண்டும். அப்படி செய்யாமல் போனால், இப்படித்தான் ஆகும்.
ஹைதராபாத்: ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலியாகினர். 2 பேர் மாயமாகி உள்ளனர், அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; ஆந்திர பிரதேசம் கோனசீமா மாவட்டத்தில் செரிலங்கா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள காக்கிநாடா, மண்டபேட்டா பகுதிகளில் இருந்து சிலர் வந்திருந்தனர்.விழா முடிந்த பின்னர், அவர்கள் கிராமத்தின் அருகில் உள்ள கோதாவரி ஆற்றுக்கு சென்றிருந்தனர். அங்கு குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி 6 பேர் பலியாகினர். மேலும் இருவரை காணவில்லை.இதுகுறித்து ஊர்மக்கள் போலீசுக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், நீரில் மூழ்கி பலியான 6 பேரின் சடலங்களை மீட்டனர். காணாமல் போன 2 பேரை மாநில பேரிடர் மீட்பு படை, உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.பலியானவர்களின் பெயர், வயது உள்ளிட்ட விவரங்கள் எதையும் போலீசார் வெளியிடவில்லை. அவர்களை பற்றி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
நாடெங்கிலும் மழைக்காலம். ஆற்றில் எப்பொழுது வெள்ளம் வரும் என்று தெரியாது. அப்படி இருக்கும்போது எச்சரிக்கையுடன் ஆற்றில் இறங்கி குளிக்கவேண்டும். அப்படி செய்யாமல் போனால், இப்படித்தான் ஆகும்.