உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூடி இருக்கும் ரயில்வே கேட் கடக்க முயன்றால் 6 மாதம் சிறை

மூடி இருக்கும் ரயில்வே கேட் கடக்க முயன்றால் 6 மாதம் சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மூடி இருக்கும் ரயில்வே கேட் பகுதிகளை, இரு சக்கர வாகனங்களில் கடக்க முயல்வோருக்கு, ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்' என, தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.கடலுார் மாவட்டம், ஆலப்பாக்கம் கிராமத்தில், கடந்த 8ம் தேதி காலையில் பள்ளி வாகனம் மீது, விழுப்புரம் - மயிலாடுதுறை பயணியர் ரயில் மோதியதில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.இதையடுத்து, ரயில்வே கேட்களில் தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது. கவனக்குறைவாக செயல்படும் 'கேட் கீப்பர்'கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதேபோல், பாதுகாப்பு விதியை மீறும், வாகன ஒட்டிகள் மீதும் நடவடிக்கை எடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ரயில்வே பாதைகளை கடந்து செல்வது, பாதுகாப்பு விதிமீறல்.குறிப்பாக, ரயில்வே 'கேட்' மூடியிருக்கும்போது, சிலர் சைக்கிள், பைக்கில் உள்ளே புகுந்து செல்ல முயற்சிக்கின்றனர்.இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட கூடாது என தொடர்ந்து விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.இப்படி விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு, இந்திய ரயில்வே சட்டம், 146 பிரிவுபடி, ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V Venkatachalam
ஜூலை 27, 2025 09:37

அபராதம் ரூ 1000. இப்போ இதெல்லாம் பணமே இல்லை.அப்புறம் பூட்டி இருக்கும் கேட்டில் புகுந்து போனால் தான் அபராதத்துடன் தண்டனை. கேட் கீப்பரை மிரட்டி கேட்டை திறக்க வைத்து போனால் அபராதம் தண்டனை ரெண்டும் கிடையாது. நடப்பது திராவிடியா மூடல் அரசாட்சி. அதனால் இப்படியெல்லாம் வெட்கமில்லாமல் சிந்திக்கிறோம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 27, 2025 08:41

போதாது ........ வாகனங்களையும் நிரந்தரமாகப் பறிமுதல் செய்யணும் .......


ஈசன்
ஜூலை 27, 2025 08:37

கேட் திறக்கும் வரை வாகனங்கள் செல்வதற்கு தடை சரியான முடிவு. ஒவ்வொரு கேட்டிலும் cctv அமைந்து கண்காணிக்க பட வேண்டும். தவிர சுரங்க பாதையோ அல்லது மேம்பாலமோ விரைவாக அமைக்க பட வேண்டும்.


Padmasridharan
ஜூலை 27, 2025 07:34

நடப்பவர்களுக்கும் இரு சக்கர வாகனங்களுக்கும் பாலத்தை கட்டலாமே சாமி இந்த மாதிரி இடத்தில். வேகமாக செல்லும் வாகனங்களுக்கு தரும் மரியாதை நடந்து செல்லும் உயிர்களுக்கு தருவதில்லையே


subramanian
ஜூலை 27, 2025 04:38

விபத்தில் சிக்கி உயிர் போவதற்கு யாரும் விரும்புவதில்லை


முக்கிய வீடியோ