உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!

கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி; உத்தரகண்டில் சோகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மானசா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஜூலை 27) சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் கூடினர். அப்போது திடீரனெ கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=w6c7zjv0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த துயர சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து போலீஸ் கமிஷனர் வினய் சங்கர் பாண்டே கூறுகையில், ''ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் ஒரு பெரிய கூட்டம் கூடியது. போலீசார் இருந்தும் நெரிசல் ஏற்பட்டு விட்டது. இனி வரும் காலங்களில் இத்தகைய நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 28, 2025 20:59

கும்பமேளாவில் இறந்த ஆயிரக்கணக்கான பேரையே இன்னும் கரை சேர்க்க முடியாம இருக்கு. பாஜக உ.பி அரசு சாவே இல்லைன்னு புளுகி முடிச்சிட்டானுங்க.


Sankaranarayanan
ஜூலை 27, 2025 22:21

We have visited this temple just last week, at the top of the hill, no proper organisation, My deep condolences to the family of bereaved persons. May their soul rest in peace. At least, if the government take this as a lesson and correct many things here. This can't happen again.


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 28, 2025 20:55

மந்தைகளை போல போயி மொத்தமா விழுவீங்க. நசுங்கி நேரா டிக்கெட்டு. கும்பிடப் போன சாமி காப்பாத்தல்லை. கேட்டா அவன் தலையெழுத்தும்பே. அறிவில்லாதவனுக்குத் தான் தலையெழுத்து.


sridhar
ஜூலை 27, 2025 12:39

TTD முறையே சரி . பக்தர்களை தங்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தான் அனுப்பவேண்டும் .


அப்பாவி
ஜூலை 27, 2025 11:14

எங்க பாத்தாலும் மக்கள் கூட்டம்...


முக்கிய வீடியோ