உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 நாட்களில் 66 விமான பயண சேவை ரத்து; போயிங் டிரீம்லைனர் விமானங்களால் அச்சம்!

6 நாட்களில் 66 விமான பயண சேவை ரத்து; போயிங் டிரீம்லைனர் விமானங்களால் அச்சம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்தின் நீட்சியாக 6 நாட்களில், போயிங் 787 - 8 டிரீம்லைனர் ரக விமான சேவை, 66 முறை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.ஜூன் 12ம் தேதி நிகழ்ந்த ஆமதாபாத் விமான விபத்தின் சுவடுகள் இன்னமும் பலர் நினைவை விட்டு அகலவில்லை. விபத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் உரிய முறையில் அடையாளம் காணப்பட்டு வருகிறது.இந்த விபத்தை அடுத்து விமான பயணம் தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள், பயணத்திட்டம் உள்ளிட்டவை குறித்து பலரும் விழிப்புணர்வு பெற ஆரம்பித்துள்ளனர். அதே நேரத்தில் விமான பயணம் பற்றிய அச்சத்தையும் பலரிடம் காண முடிந்தது. ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்து 6 நாட்கள் கடந்துவிட்டது. இந்த 6 நாட்களில் மொத்தம் 66 போயிங் 787-8 டிரீம்லைனர் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கூறி உள்ளதாவது; விபத்து நிகழ்ந்த அன்று (ஜூன் 12) அதிக அகலம் கொண்ட 90 விமானங்கள் இயக்கப்பட்டன. அவற்றில் 50 விமானங்கள் போயிங் 787 டிரீம் லைனர் விமானங்கள் ஆகும். இதில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த 6 விமானங்களில் 5 விமானங்கள் டிரீம்லைனர் வகையை சேர்ந்தவை.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் வரை, பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2024ல் மட்டும் ஏர் இந்தியா நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ