உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் 7 நக்சல்கள் பலி

சத்தீஸ்கரில் 7 நக்சல்கள் பலி

பஸ்தார், சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஏழு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தின் தெற்கு அபுஜாமத் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர், மத்திய ரிசர்வ் போலீசார், நாராயண்பூர், தண்டேவாடா, ஜக்தால்பூர், கொங்க்டகன் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்ததில், நேற்று பிற்பகல் வரை ஏழு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடப்பதாலும், தேடுதல் வேட்டை நீடிப்பதாலும், நக்சல்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று முதல் 15 வரை சத்தீஸ்கரில் பயணம் மேற்கொள்ளும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ