உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் 7 நாட்களில் 7.25 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் 7 நாட்களில் 7.25 லட்சம் பக்தர்கள் தரிசனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: மகரஜோதி தரிசனத்திற்கு இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலை மோதுகிறது. இந்த சீசனில் 7.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை டிச. 30 மாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. அன்றுமுதல் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. டிச. 30 முதல் ஜன., 6 அதிகாலை 12:00 மணி வரை 7 லட்சத்து 25 ஆயிரத்து 261 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஜன. 6 ல் மட்டும் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 12 பேர் தரிசனம் செய்தனர். இது ஜன.5- ல் 90 ஆயிரத்து 678 ஆக இருந்தது.

நீண்ட வரிசை

நடை திறந்த நாள் முதல் பக்தர்களின் நீண்ட கியூ எப்போதும் மர கூட்டம் வரை காணப்படுகிறது. இதனால் 7 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். எருமேலி , புல்மேடு பாதைகளில் வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. புல் மேடு பாதையில் சத்திரத்திலிருந்து காலை 6:00 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், எரிமேலியிலிருந்து பெருவழிப் பாதையில் முக்குழியில் இருந்து மாலை 4:00 மணி வரையிலும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.சன்னிதானம், வாவர்நடை முன்புறம் உள்ள மைதானம், மாளிகைப்புறம் கோயில் அருகில் உள்ள மைதானங்களில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் நிறைந்துள்ளது. அப்பம் ,அரவணை கவுன்டர்களிலும் 24மணி நேரமும் நீண்ட கியூ காணப்படுகிறது.பம்பையில் 'ஸ்பாட் புக்கிங்'குக்காக ஏழு கவுன்டர்கள் செயல்படுகிறது. இங்கு பக்தர்களின் நீண்ட கியூ திருவேணி சங்கமம் வரை உள்ளது .பாஸ் வழங்குவது தாமதமாவதாகவும், இதனால் சிரமப்படுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

தமிழக பக்தர்கள் மீட்பு

இதற்கிடையில் புல் மேடு பாதையில் நடுவழியில் சிக்கிய தமிழக பக்தர்கள் நான்கு பேரை போலீசார் மற்றும் தேவசம்போர்டு ஸ்டிரெச்சர் சர்வீஸ் ஊழியர்கள் மீட்டு வந்தனர்.சென்னையை சேர்ந்த லீலாவதி, ஆண்டனி, பெரியசாமி, மதுரையைச் சேர்ந்த லிங்கம் ஆகிய நான்கு பேர் உடல்நலக்குறைவு காரணமாக உரக்குழியில் இருந்து மூன்று கி. மீ. துாரத்தில் தொடர்ந்து செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டனர். இது குறித்து வனத்துறை அளித்த தகவலில் நான்கு பேரும் மீட்கப்பட்டு சன்னிதானம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

P Prabhakaran guruswamy
ஜன 08, 2025 15:00

சபரிமலை அய்யப்பன் ஐயப்பன் சரணம் ஶ்ரீ ஶ்ரீ ஐயப்பா சாமியே சரணம் சரணம் ஐயப்பா ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஐயப்பா சாமியே சரணம் என் 56 வரை சாமி இடத்தை வகிக்கிறது நான் பிறந்த நாளை நான் காத்திருக்கிறேன் சாமி சரணம் ஐயப்பா ஶ்ரீ சாமியே ஐயப்பா ஶ்ரீ ராம ராம ராம நாமம் ஶ்ரீ ஹனுமன் ஶ்ரீ ராம சரணம் சரணம் சரணம் சரணம் ஐயப்பா சரணம்


Barakat Ali
ஜன 08, 2025 10:03

இசைவாணியக்கா இன்னுமா சபரிமலை போகலை?? அங்கேயாவது சனாதனத்தை ஒழிக்க இசைவாணியக்காவுடன் உதயநிதியும் போகணும் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை