உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாக்டர் படிப்பில் புதிதாக 75,000 இடங்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு

டாக்டர் படிப்பில் புதிதாக 75,000 இடங்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்பாங்கா: நாடு முழுதும்மருத்துவ படிப்புக்கு, புதிதாக 75,000 இடங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பாட்னாவில் ஏற்கனவே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வரும் நிலையில், தர்பாங்காவில் 1,260 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது, பீஹாரில் 5,070 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளவுள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். அதுமட்டுமின்றி, 1,520 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், 4,020 கோடி ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறைசார் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி கூறியதாவது:

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு முதல்வர் நிதீஷ் குமாரின் பங்கு அளப்பரியது. மாநிலத்தை முந்தைய காட்டாட்சி பிடியில் இருந்து அவர் மீட்டுள்ளார். நாடு முழுதும் மருத்துவ படிப்புக்கு புதிதாக 75,000 இடங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுஉள்ளது. தாய்மொழியில் மருத்துவக் கல்வி என்ற மிகப்பெரிய முடிவை அரசு எடுத்துள்ளது. விரைவில், ஹிந்தி உட்பட இந்திய மொழிகளில் மருத்துவப் படிப்பை கொண்டு வரவுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் காலில் விழுந்த நிதீஷ்

திட்டங்களை துவக்கி வைத்து மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடியை நோக்கிச்சென்ற முதல்வர் நிதீஷ் குமார், கைகூப்பி வணங்கியதுடன், திடீரென அவர் காலில் விழுந்தார். அதைத் தடுத்த பிரதமர் மோடி, கைகளை குலுக்கி தன் அருகே அமர வைத்தார். அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியினர் மோடிக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக பிரமாண்ட மாலை அணிவித்தபோது, அருகில் இருந்த நிதீஷ் குமாரையும் அவர் அருகே இழுத்து நிறுத்திக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

K.n. Dhasarathan
நவ 17, 2024 17:55

அங்கு ஏற்கனவே அய்ய்ம்ஸ் இறுக்காயில் இன்னொரு அய்ய்ம்ஸ், ஆனால் தமிழ் நாட்டிற்கு மட்டும் பட்டை நாமம்,கல்லூரிக்கு இடமே இல்லையாம், ஆனால் படிப்புக்கு மட்டும் புதிதாக 75000 இடங்களாம், என்ன ஒரு கதை, இப்படி அலந்துவிட யாரால் முடியும் ?


J.V. Iyer
நவ 14, 2024 04:48

ஒரு சீட்டுக்கு பத்து லட்சம் வைத்தாலும் இவ்வளவு இடங்களுக்கு எவ்வளவு நிதி சேர்க்கலாம் என்று நிதிக்குடும்பம் பதறுவது கண்கொள்ளாக்காட்சி. நீட் வந்து எல்லாத்தையும் கெடுத்துவிட்டது. சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டு..


karupanasamy
நவ 14, 2024 02:42

திராவிடன் மாடல்னா ராசாவை துரத்தி அடிச்சிட்டு கொடுக்க பக்கத்துல உட்க்கார வைப்பார்.


புதிய வீடியோ