உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயுத தொழிற்சாலை விபத்து மஹா.,வில் 8 பேர் உயிரிழப்பு

ஆயுத தொழிற்சாலை விபத்து மஹா.,வில் 8 பேர் உயிரிழப்பு

மும்பை:மஹாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்.மஹாராஷ்டிராவின் பந்தாரா மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று காலை, 10:30 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டது. இதில், தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதன் சத்தம், 5 கி.மீ., வரை கேட்டது. தொழிற்சாலை உள்ள இடத்தில் இருந்து கரும்புகை வெளிவருவதை பார்த்து மக்கள் பதற்றம் அடைந்தனர். தீயணைப்பு படையினர் மற்றும் மருத்துவ குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில், 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் சிக்கி, எட்டு பேர் உயிரிழந்தனர்; ஏழு பேர் காயம் அடைந்தனர். மூவர் உயிருடன் மீட்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ